இலங்கை குண்டு வெடிப்பு: இந்திய ஊடகங்களை ட்விட்டரில் வறுத்தெடுக்கும் இலங்கை மக்கள்

பட மூலாதாரம், RIZWAN TABASSUM
இலங்கையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு குறித்து இந்திய ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிட்டு வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளதாக இலங்கையை சேர்ந்த பலர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணி முதல் 9.15மணிக்குள்ளாக, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
அதனை தொடர்ந்து மதியம் இரண்டு மணியளவில், தெஹிவலாவிலும், கொழும்புவின் தெமடகொட பகுதியிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.
இந்த தாக்குதல்களை நடத்தியது யார் என்பது குறித்த தகவல்களை இலங்கை அரசே அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில், பல்வேறு இந்திய செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்ட மதத்தையும், அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்திய ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநலத்திற்காக இலங்கையை பயன்படுத்திக்கொள்வதாக அருணி என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"இந்திய ஊடகங்கள் மற்றும் சில இந்திய அரசியல்வாதிகள் தங்களது சொந்த அரசியல் நலனுக்காக இலங்கையின் துயரத்தைப் பயன்படுத்துவதை கண்டு அதிர்ச்சியும், ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது."
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
"இந்தியர்கள் போலிச் செய்திகளை பரப்பி வருகிறார்கள். அவர்களது ட்விட்டர் பதிவுகள் குறித்து புகாரளியுங்கள்" என்று டக்ஷிகா என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
"இந்திய ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை பார்க்கையில் எனது வயிறு கோபத்தில் எரிகிறது" என்று பயாஸ் என்பவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"இந்திய ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், எந்தவொரு நம்பகமான ஆதாரமும் இன்றி இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து முஸ்லிம்களை குற்றம் சாட்டுவதன் மூலம், இந்திய ஊடகங்கள் எவ்வாறு இஸ்லாமியத்திற்கு எதிரான மனநிலையுடன் இயங்குகின்றன என்பதும், இந்தியாவில் பத்திரிகைத் துறை எவ்வாறு சமரசம் செய்யப்பட்டுள்ளது என்பதும் அம்பலப்படுகிறது"என்று இந்தியாவை சேர்ந்த ஒருவரும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
பிற செய்திகள் :
- "இலங்கையில் தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு" - அமெரிக்கா எச்சரிக்கை - LIVE
- "சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்தேன்": இலங்கை குண்டுவெடிப்பில் தப்பியவரின் அனுபவம்
- சென்னை அணி தோற்றாலும், ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்திய தோனியின் அதிரடி ஆட்டம்
- மோதியை எதிர்த்து வாரணாசியில் போட்டியா? - பிரியங்கா காந்தி பதில்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்