You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையின் முதலாவது செயற்கைக்கோள் 'ராவணா 1" விண்ணுக்கு ஏவப்பட்டது
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையர்கள் இருவரின் முயற்சியில் நிர்மாணிக்கப்பட்ட 'ராவணா 1" செயற்கைக்கோள் இன்று (வியாழக்கிழமை) விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டதாக நாசா நிறுவனம் தெரிவிக்கின்றது.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 2.16 மணி அளவில் இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவிலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.
தரிந்து தயாரத்ன மற்றும் துரனி ஷாமிகா ஆகிய இரண்டு இலங்கையர்களின் தயாரிக்கப்பட்ட 'இராவணா 1" செய்மதி கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் திகதி ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு கையளிக்கப்பட்ட 'ராணவா 1" செய்மதியுடனான ரொக்கெட், அமெரிக்காவின் வர்ஜினியாவிலிருந்து இன்று அதிகாலை, சர்வதேச விண்வெளி ஆய்வு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிக்னுஸ் (Cygnus) என்றழைக்கப்படும் பொட்களுடனான ராக்கெட் மூலம் இந்த 'ராவணா 1" செயற்கைக்கோள் செயற்கைக்கோள்நாசாவினால் சர்வதேச விண்வெளி ஆய்வு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பார்ட்ஸ் 3 செயற்கைக்கோள் திட்டம் (BIRDS 3 Satellite Project) என்ற பெயரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இலங்கை, ஜப்பான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து மூன்று சிறியரக செய்மதிகளை இன்று விண்ணுக்கு ஏவியிருந்தன.
சிறிய ரகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளுக்கு , மிகவும் குறைந்தளவிலான நிதியே செலவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1000 செ.மீ அளவை கொண்டமைந்துள்ள இந்த செயற்கைக்கோள், 1.05 கிலோகிராம் எடையை கொண்டமைந்துள்ளது.
சர்வதேச விண்வெளி மத்திய நிலையத்திலிருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் 'ராவணா 1" செயற்கைக்கோளை நிலைநிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்;த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் ஒன்றரை வருடம் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஐந்து வருடங்கள் அதன் பயன்பாட்டை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ராவணா 1 செயற்கைக்கோளின் பயன்பாடு
இலங்கை மற்றும் அதனை அண்மித்துள்ள வலய நாடுகள் புகைப்படங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பல பயன்பாட்டு திட்டங்களை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆர்த்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சனத் பனாவென்னவின் யோசனைக்கு அமைய இந்த செயற்கைக்கோள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அதற்கு 'ராவணா 1" என பெயர் சூட்டிப்பட்டிருந்தது.
ராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்