You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வறட்சியால் இலங்கையின் விவசாய உற்பத்தி 50% வீழ்ச்சி: சிறிசேன
இலங்கையில் கடந்த கால வறட்சி காரணமாக பல குளங்களில் நீர் வற்றிப் போன நிலையில் விவசாய உற்பத்தியில் 50% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் மாவட்டம் கெக்கிறாவ பிரதேசத்தில் இன்ற வெள்ளிக்கிழமை " தேசிய உணவு உற்பத்தி புரட்சி வாரம்" வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
"கால நிலை மாற்றத்தினால் சிக்கலுக்கு உட்பட்டுள்ள உணவு உற்பத்திற்கு புத்துயிர் கொடுத்து அதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு, பேதங்களை மறந்து அனைத்து தரப்பும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்," என்று தனது உரையில் அவர் கேட்டுக் கொண்டார்.
2018ஆம் ஆண்டை தேசிய உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடனப்படுத்துவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருக்கின்றார்.
"அந்த அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் விவசாய உற்பத்தி உபகரணங்களுக்கு அடுத்த ஆண்டு வரவு - செலவு திட்டத்தில் வரி விலக்கு அளிக்கப்படும்," என்றும் அவர் கூறினார்.
"கைவிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் மீண்டும் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படும். தனியாருக்குரிய விவசாய காணிகளில் உரிமையாளரால் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படாத நிலையில், அக்காணியில் வேறொருவர் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
அதில் காணி உரிமை தொடர்பாக எந்த மாற்றமும் இராது. இதற்கேற்ப சட்ட ஏற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. " என்றும் குறிப்பிட்டார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்