டென்னிஸ் சாதனையை நோக்கி ரஃபேல் நடால்

பட மூலாதாரம், AP
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளில் இறுதி ஆட்டத்துக்கு ஸ்பெயினின் ரஃபேல் நடால் தகுதி பெற்றுள்ளார்.
வெள்ளியன்று (7.6.13) நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் அவர் ஆடவர் டென்னிஸ் உலகின் தரப்பட்டியலின் முதலிடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவாக் யாக்கோவிச்சை வென்றார்.
இதுவரை ஏழு முறை பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளை வென்றுள்ள நடால் யாக்கோவிச்சை 6-4 3-6 6-1 6-7 (3-7) 9-7 எனும் செட் கணிக்கல் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.
இந்த போட்டி நான்கரை மணி நேரத்துக்கு சற்று கூடுதலாக நடைபெற்றது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸின் ஜோ வில்ஃப்ரெட் சோங்கா மற்றும் ஸ்பெயினின் டேவிட் ஃபெரரும் மோதுகின்றனர்.

பட மூலாதாரம், AFP
ஆடவருக்கான இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இறுதிப் போட்டியில் ரஃபேல் நடால் வெற்றி பெற்றால், டென்னிஸ் உலகில் இதுவரை யாரும் சாதிக்காத வகையில், எட்டாவது முறையாக ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியை வென்றவர் எனும் பெருமையை அவர் பெறுவார்.
சனிக்கிழமை நடைபெறவுள்ள மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ரஷ்யாவின் மரிய ஷரபோவாவை எதிர்த்து விளையடுகிறார்.








