You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூர்ய குமார் யாதவ்: ராயல் சேலஞ்சர்ஸ் பந்துகளை விளாசிய மும்பை இந்தியன்ஸ் வீரர் யார்? - ஐபிஎல் 2020 MI vs RCB
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 48ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மும்பை அணிக்கு 169 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
மும்பை அணி 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. இருப்பினும் வெற்றியை மும்பை அணியின் பக்கம் சாதகமாக்கினார் சூரிய குமார் யாதவ்.
அவுட் ஆகாமல் 43 பந்துகளில், மூன்று சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் என 79 ரன்களை எடுத்திருந்த அவரால் மும்பை அணி 16 புள்ளிகளுடன் பட்டியல் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
சூர்ய குமாரின் நேற்றைய ஆட்டத்தை தொடர்ந்து இந்திய அணிக்கு அவர் இதுவரை தேர்வு செய்யப்படாதமை குறித்து சமூக வலைத்தளங்களில் பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய போட்டி தொடருக்கான இந்திய அணியிலும் சூர்ய குமார் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் சூர்ய குமார் யாதவிற்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.
நேற்று பலரது கவனத்தையும் பெற்ற ஆட்டநாயகன் சூர்ய குமார் யாதவ் பற்றிய 10 சுவாரசிய தகவல்கள்.
- சூர்ய குமார் யாதவுக்கு 30 வயதாகிறது. 1990ம் ஆண்டு பிறந்த இவர் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதிதான் 30 வயதை நிறைவு செய்தார். சூர்ய குமார் யாதவ் மனைவியின் பெயர் தேவிஷா ஷெட்டி.
- மும்பையைச் சேர்ந்த சூர்ய குமார் யாதவ் வலது கை பேட்ஸ்மேன் மட்டுமல்ல வலது கை மித வேகப்பந்து வீச்சாளரும் கூட.
- சூர்ய குமார் யாதவை 2018ஆம் ஆண்டு 3.2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்.
- முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நான்கு ஆண்டுகள் அவர் விளையாடி வந்தார்.
- சூர்ய குமார் முதன்முதலாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகத்தான் விளையாடிக் கொண்டிருந்தார்.
- 2012இல் அவர் தேர்வான சமயத்தில் மும்பை அணியில் சச்சின், ஜெயவர்த்தனே என முன்னணி வீரர்கள் இருந்ததால் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
- 2018இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து மீண்டும் மும்பைக்கு வந்தவுடன் அந்த சீசனில் நான்கு அரை சதம் அடித்தது மட்டுமல்லாமல் 512 ரன்கள் எடுத்தார் அவர்.
- பல இளம் வீரர்கள் ஐபிஎல் போட்டி மூலம் தங்கள் திறனை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடித்துள்ள நிலையில் சூர்ய குமார் இது வரை இந்திய அணிக்காக ஒரு முறை கூட தேர்வு செய்யப்படவில்லை.
- நேற்றைய போட்டி உள்பட இதுவரை விளையாடியுள்ள ஐபிஎல் போட்டிகளில் அவர் 1910 ரன்கள் எடுத்துள்ளார்.
- கொல்கத்தா அணியில் விளையாடிய காலத்தில் அந்த அணிக்கு துணை கேப்டனாகவும் சூரியகுமார் இருந்துள்ளார்.
பிற செய்திகள்:
- அமெரிக்க சட்டப்பிரிவு 230: ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் நிறுவனங்கள் வழக்கில் இருந்து தப்புவது எப்படி?
- "ஆரோக்கிய சேது" தயாரித்தது யார்? மழுப்பல் பதில்கள், எச்சரித்த தகவல் ஆணையம்
- இலங்கையில் வல்லரசுகளின் ஆதிக்கம்: ஆபத்தில் சிக்குகிறதா தீவு நாடு?
- மதுரை எய்ம்ஸ் உறுப்பினராக சுப்பையா சண்முகம் நியமனம்: எதிர்கட்சிகள் கண்டனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: