டி20 உலகக்கோப்பை: இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் மோதல்

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதியாட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது .

வரும் ஞாயிறுக்கிழமை மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கவுள்ளது.

இன்று நடைபெற்ற இரண்டாவது இறுதியாட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை ஐந்து ரன்கள் வித்தியாசத்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலிய அணி.

News image

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 134 ரன்கள் எடுத்தது.

மழை காரணமாக, டிஎல்எஸ் முறைப்படி 13 ஓவர்களில் 98 ரன்கள் எடுக்க வேண்டும் என்று வெற்றி இலக்கு குறைக்கப்பட்டது.

ICC Women's T20 Cricket World Cup

பட மூலாதாரம், Cameron Spencer / getty images

ஆனால் 13வது ஓவர் வரை தென்னாப்பிரிக்க அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் மட்டுமே இழந்தது.

அரை இறுதியில் விளையாடாமலேயேஇறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றஇந்தியா

பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரை இறுதியில் விளையாடாமலேயே இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

சிட்னியில் இன்று (வியாழக்கிழமை) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கவேண்டிய அரையிறுதி போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்ட நிலையில், லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்று முதலிடத்தை பிடித்ததால் அதன் அடிப்படையில் இறுதியாட்டத்தில் விளையாட இந்தியா தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் முதல்முறையாக விளையாடவுள்ளது இந்தியா.

இன்று மாலையில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெல்லும் அணியை இறுதியாட்டத்தில் இந்தியா சந்திக்கும்.

பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் பிரிவில், ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியா லீக் போட்டிகள் அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

சர்வதேச பெண்கள் தினமான வரும் மார்ச் 8-ஆம் தேதியன்று, டி20 மகளிர் உலகக்கோப்பை இறுதியாட்டம் நடக்கவுள்ள நிலையில், பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என் இரண்டிலும் சிறப்பாக விளையாடிவரும் இந்தியா முதல்முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: