You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
IND Vs NZ: முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா - 5 முக்கிய காரணங்கள்
வெலிங்டனில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கிரிக்கெட் டெஸ்டில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணியின் தோல்விக்கு இவை தான் 5 முக்கிய காரணங்கள்.
பந்துவீச்சில் மிரட்டிய நியூசிலாந்து
நியூசிலாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த அணியின் பந்துவீச்சுதான். அந்த அணியின் அறிமுக பந்துவீச்சாளர் ஜேமிசன் முதல் இன்னிங்ஸில் எடுத்த 4 விக்கெட்டுகள் இந்திய அணியை நிலைகுலைய வைத்தது. அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸ்கில் வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் மிக சிறப்பாக பந்துவீசினார்.
இரண்டு இன்னிங்கிஸிலும் நியூசிலாந்து அணியின் டிம் செளதி சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். அவரின் பந்துவீச்சு இந்திய வீரர்களை தடுமாறச் செய்தது.
கோலிக்கு என்ன ஆனது?
இரண்டு இன்னிங்ஸ்களிலும் கேப்டன் விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது இந்திய அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. முதல் இன்னிங்ஸில் 2 ரன்களில் ஆட்டமிழந்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
கட்டுப்படுத்த தவறிய இந்திய பந்துவீச்சாளர்கள்
நியூசிலாந்து அணியை முதல் இன்னிங்ஸில் குறைந்த ரன்களில் இந்திய பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியாததும் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம். குறிப்பாக 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நியூசிலாந்தின் பின்வரிசை பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க இந்திய அணி ஆக்ரோஷமான பாணி எதனையும் மேற்கொள்ளாததால், கடைசி 3 விக்கெட்டுகளுக்கு நியூசிலாந்து 100 ரன்களுக்கு மேல் சேர்த்தது.
ஏமாற்றிய புஜாரா
கோலி போல இந்தியாவுக்கு இன்னொரு ஏமாற்றம் புஜாராவின் பேட்டிங். இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் தலா 11 ரன்கள் தான் எடுத்தார். வெளிநாடுகளில், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படும் புஜாரா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், இந்தியாவால் எதிர்பார்த்த அளவு ரன்கள் குவிக்கமுடியவில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின்நியூசிலாந்து சுற்றுப்பயணம்
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரிலும் விளையாடியுள்ளது.
டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா வெல்ல, ஒருநாள் போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று பழி தீர்த்தது நியூசிலாந்து அணி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: