IPL 2020 : சென்னை சூப்பர் கிங்க்ஸ் மோதும் போட்டிகள் நடப்பது எங்கு? எப்போது?

2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

2008ஆம் முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடரின் 13ஆவது பதிப்பு இந்த ஆண்டு நடைபெறுகிறது.

மார்ச் மாதம் 29-ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பையில் நடக்கிறது.

இந்த ஐபிஎல் தொடரின் இறுதி [போட்டி மும்பையில் வரும் மே 24ஆம் தேதி நடக்கிறது.

லீக் சுற்று போட்டிகளுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்ட போதிலும், பிளே ஆஃப் மற்றும் இறுதிச்சுற்று ஆட்டங்களின் அட்டவணை தற்போது வெளியிடப்படவில்லை.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்த தொடரில் சிஎஸ்கே மோதும் போட்டிகள் பட்டியல் இது.

மார்ச் 29, 2020 - சிஎஸ்கே - மும்பை (மும்பை)

ஏப்ரல் 2, 2020 - சிஎஸ்கே - ராஜஸ்தான்

ஏப்ரல் 6, 2020 - சிஎஸ்கே- கொல்கத்தா (கொல்கத்தா)

ஏப்ரல் 11, 2020 - சிஎஸ்கே -பஞ்சாப்

ஏப்ரல் 13, 2020- சிஎஸ்கே-டெல்லி (டெல்லி)

ஏப்ரல் 17, 2020 - சிஎஸ்கே- பஞ்சாப் (பஞ்சாப்)

ஏப்ரல் 19, 2020 - சிஎஸ்கே- ஹைதராபாத்

ஏப்ரல் 24, 2020 - சிஎஸ்கே- மும்பை

ஏப்ரல் 27, 2020- சிஎஸ்கே- பெங்களூரு

ஏப்ரல் 30 - சிஎஸ்கே - ஹைதராபாத் (ஹைதராபாத்)

மே 4, 2020 - சிஎஸ்கே - ராஜஸ்தான் (ராஜஸ்தான்)

மே 7, 2020 - சிஎஸ்கே கொல்கத்தா

மே 10, 2020 - சிஎஸ்கே - டெல்லி

மே 14, 2020 - சிஎஸ்கே -பெங்களூரு (பெங்களூரு)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: