இந்தியா V தென் ஆப்ரிக்கா டி20 : ‘கோலி ஆடிய தாண்டவம்’ - வெற்றியுடன் கணக்கை தொடங்கிய நீல நிற ஜெர்ஸி

பட மூலாதாரம், Getty Images
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 72 ரன்களை குவித்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
'டாஸிலும் வெற்றி'
இந்திய நேரப்படி நேற்று மாலை சரியாக 7 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்கா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை குவித்தது.
தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டீகாக் அதிகபட்சமாக 52 ரன்களும், அடுத்ததாக பௌமா 49 ரன்களும் எடுத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19வது ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர். அடித்த பவுண்டரியால் ஸ்கோர் 151 ஆக உயர்ந்து வெற்றி பெற்றது.
'கோலி ஆடிய தாண்டவம்'

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் முதலில் களமிறங்கினார். ரோஹித் சர்மா இரண்டு சிக்ஸர் அடித்த நிலையில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து தவானுடன் கோலி களமிறங்கினார். இந்த அணி அடித்து விளையாடியதில் இந்திய அணி வெற்றிப் பாதைக்கு விரைவாக முன்னேற்றியது.
இந்த சூழலில் தவான் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்தும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி நின்று விளையாடி இந்திய அணியின் வெற்றியை உறுதி படுத்தினார்.
ஆட்ட இறுதியில் கோலி 52 பந்துகளில் 72 ரன்கள் குவித்து இருந்தார். விராட் கோலி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த தொடரில் இன்னும் ஒரே ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், அந்த போட்டியின் வெற்றிதான், தொடரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

நான் ஏன் ஹிஜாப் அணிந்து ஆபாச படத்தில் நடித்தேன்: மியா கலிஃபா
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












