ஹசிம் ஆம்லா: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Pal Pillai-IDI
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹசிம் ஆம்லா சர்வதேச போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு வயது 36.
தென்னாப்பிரிக்க வீரர்களிலேயே டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்களில் இவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 28 சதங்களுடன் 9,282 ரன்களை குவித்துள்ளார்.
முச்சதம் அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரரும் இவர்தான். 2012ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்துடனான போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 311 ரன்களை அம்லா நடித்திருந்தார்.
தென்னாப்பிரிக்காவின் முதல் வெள்ளையர் அல்லாத அணித் தலைவராக விளங்கிய ஹசிம் ஆம்லா, 2014 முதல் 2016 டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கினார்.
எல்லாவிதமான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்ந்து பார்க்கும்போது, ஹசிம் ஆம்லா 349 போட்டிகளில் பங்கேற்று 55 சதங்களுடன் 18,000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
இவர் ஒருநாள் போட்டிகளில் அடித்த 27 சதங்களே தென்னாப்பிரிக்க வீரர் ஒருவர் ஒருநாள் போட்டிகளில் அடித்த அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தான் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரை

பட மூலாதாரம், Getty Images
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நேற்று இரவு (வியாழக்கிழமை) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலம் என்ற நிலையில் இருந்து, அதிகாரமற்ற இரண்டு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், காணொளி மூலம் இந்த உரையை நிகழ்த்தினார் அவர்.
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும், லடாக் மக்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்து அவர் பேசத் தொடங்கினார். "ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் சகோதர சகோதரிகளின் பல உரிமைகள் மறுக்கப்படக் காரணமாக இருந்த, வளர்ச்சிக்குத் தடையாக இருந்த ஒரு ஏற்பாடு நீக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார் .

மோதி பிரதமர் ஆவதை சுஷ்மா ஸ்வராஜ் எதிர்த்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
டிசம்பர் 2015ல் பிரதமர் நரேந்திர மோதி ஆப்கானிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பும் வழியில் லாகூரில் இறங்கி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் திருமணத்தில் அவருடைய வீட்டில் கலந்து கொள்ள முடிவு செய்தபோது, உலகே அவருடைய அரசியல் அணுகு முறையைப் பாராட்டியது.
ஆனால் அதற்குத் திட்டமிட்டுக் கொடுத்தது அவருடைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும்.
மால்டாவில் காமன்வெல்த் தலைவர்கள் சந்தித்தபோது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு அருகில் சுஷ்மா ஸ்வராஜ் அமர்ந்திருந்தார்.
விரிவாக படிக்க:மோதி பிரதமர் ஆவதை சுஷ்மா ஸ்வராஜ் எதிர்த்தது ஏன்?

நீலகிரி மாவட்டத்தில் கன மழை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தென் மேற்கு பருவமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
நீலகிரி, கோவை, வால்பாறை ஆகிய பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக அதிக அளவு மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
வழக்கமாக ஜீன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் வரை நான்கு மாதங்களுக்கு தென் மேற்கு பருவமழை இருக்கும்.
விரிவாக படிக்க:நீலகிரி மாவட்டத்தில் கன மழை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காஷ்மீருக்கு சிறப்புரிமை தந்த அரசமைப்பு சட்டப்பிரிவின் முழு வரலாறு

பட மூலாதாரம், Getty Images
அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்ததன் மூலம் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை பாஜகவின் நரேந்திர மோதி அரசு திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஆனால் இந்த சிறப்பு சட்டப்பிரிவை மாற்றுவதற்கு முந்தைய காங்கிரஸ் அரசுகளும் முயற்சித்த வரலாறு உண்டு.
இந்தச் சட்டப் பிரிவு ஏன் கொண்டுவரப் பட்டது, ஏன் இது சர்ச்சைக்குள்ளானது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












