You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா- இங்கிலாந்து டி20: இந்தியாவின் வெற்றியை சாத்தியமாக்கிய 5 அம்சங்கள்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து அணியும் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராஃபோர்டு விளையாட்டு அரங்கில் மோதிய முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
ஓல்ட் ட்ராஃபோர்டு போட்டியின் 5 முக்கிய அம்சங்கள்
1. டாஸ் வென்ற இந்திய கிரிகெட் அணி பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தன்னுடைய அபார சுழற்பந்து வீச்சால் 24 ரன்கள் மட்டுமே வழங்கி, இங்கிலாந்தின் அணியை சோந்த 2வது முதல் 6வது வரையான ஆட்டக்காரர்களை வெளியேற்றியது இங்கிலாந்தை தடுமாற செய்தது. ஒரு ஓவரில் 3 ஆட்டக்காரர்களை குல்தீப் யாதவ் வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.
2. இந்தியாவின் ராகுல் 54 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர்கள், 10 பவுண்டிரிகள் அடித்து 101 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தது இந்தியாவின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.
3. சர்வதேச டி20 போட்டியில் ரோகித்துக்கு பிறகு 2 சதங்கள் அடித்த பெருமையை ராகுல் தன்வசமாக்கியுள்ளார்.
4. இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் பட்லர் 69 ரன்கள் குவித்தார். ராய் 30, வில்லி 29 ரன்கள் தவிர அனைத்து வீரர்களும் ரன் குவிப்பில் இரட்டை எண்களை தொடாதது இங்கிலாந்தின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியது. இதில் மூவர் ரன் எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, டி20 கிரிக்கெட் போட்டிகளில் 56 இன்னிங்ஸில் 2,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு, நியூசிலாந்து வீரர் மெக்கலம் 66 இன்னிங்ஸில் 2,000 ரன்களை கடந்திருந்தார்,
பிற செய்திகள்:
- தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு மருத்துவ சிகிச்சை
- மலேசிய முன்னாள் பிரதமர் நஜிபுக்கு எதிராக 3 ஊழல் குற்றச்சாட்டுகள்
- கால்பந்து உலக கோப்பை: காலிறுதியில் நுழைந்தது இங்கிலாந்து
- தூத்துக்குடி கலவரத்திற்கு யார் காரணம்? - விளக்கும் மக்கள் அதிகாரம்
- டெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்