ஈஸ்டர் தீவில் 'நடக்கும்' சிலைகள் - ஆய்வாளர்களை குழம்ப வைக்கும் கேள்விகள்!

    • எழுதியவர், சாரா பிரவுன்
    • பதவி,

நான் 15 மோவாய்கள் (மனித உருவங்கள் கொண்ட ஒற்றை கல் சிலைகள்) காண திரும்பியபோது அந்த கடலோர காற்று என் முகத்தை வருடியது. இரண்டு அடுக்குமாடி கட்டடம் அளவுக்கு உயரமும், பசிபிக் பெருங்கடலை அதன் பின்புறம் இருக்க, அந்த சிலைகளின் கண்கள், ஒரு காலத்தில் வெள்ளை பவளம் மற்றும் சிவப்பு எரிமலைக்கல் கொண்டு, ஈஸ்டர் தீவு வற்றாமல் இருக்க பார்த்துக் கொண்டன அவற்றின் முகங்கள், சீரான புருவங்கள், நீளமான முக்குகள் ஆகியவை மனிதர்களையும், தெய்வீக தன்மையையும் ஒன்று சேர காட்டின.

ஈஸ்டர் தீவில் அல்லது தீவில் உள்ளவர்கள் அழைப்பது போல் ராபா நுய்யில், கிட்டதட்ட 887 மோவாய்கள் அங்கும் இங்கும் சிதறியுள்ளன. சிலி தீவில் உள்ள மிகப்பெரிய நுட்பமான சிலை அமைப்புகளைக் கொண்ட அஹு கோங்கரிகி கட்டடப் பரப்பில், இந்த 15 கோவாய்கள் நின்றுகொண்டிருந்தன. இந்த மிகப்பெரிய தலைகளும், கால் இல்லாத உருவங்கள் கொண்ட சிலைகளைப் பார்க்கும்போது, 88 டன்கள் எடையுள்ள இந்த ஒற்றைக்கல் சிலைகள், குறைந்தபட்சம் 900 ஆண்டுகளுக்கு முன், எப்படி கட்டப்பட்டிருக்கும் என்று கற்பனை செய்வது கடினமாக இருந்தது. ஆனால், நான் மட்டும் இதை நினைத்து வியப்படையவில்லை. இவ்வளவு எடை கொண்ட மோவாய் இந்த தீவுக்கு எப்படி மனிதர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டிருக்கும் என்று நீண்ட காலமாக ஆராய்ச்சியாளர்கள் குழம்பிக் கொண்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக பல கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இந்த சிலைகள் அனைத்தும் மரக்கட்டைகள் மூலம் உருட்டிக்கொண்டு வரப்பட்டன என்றும், இதன் உச்சபட்சமாக வேற்றுக்கிரகவாசிகளில் உதவி மூலம் கொண்டு வரப்பட்டிருக்கக்கூடும் என்று நம்பப்பட்டன. ஆனால், மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டதும், கூர்மையான அறிவுத்திறன்தான் இதன் ரகசியம். மனிதனைப் போன்ற இந்த சிலைகள் நிமிர்ந்து நிற்கவும், கயிறுகளால் நகர்த்தி செல்லப்படும்போது, பக்கவாட்டில் இருந்து முன்னோக்கி நகர்த்தவும் உதவியது, சிலைகளுக்கு 'நடக்கும்' திறனை வழங்கியது.

ஒரு குளிர்சாதனப்பெட்டி இழுத்து செல்லப்பட்டால் எப்படி இருக்குமோ, அப்படியே, இந்த சிலைகள் நகர்த்தப்பட்டிருக்கும். "ஆனால் ராபா நுய் [ராபா நுய்க்கு பழங்குடியின பாலினேசிய மக்கள்] அதற்கு அப்பால் சென்று, உண்மையில் சிலைகளின் அடிப்பகுதியை செதுக்கி, சில கோணங்களை அமைத்தனர். அது நகர்த்துவதற்கு எளிதாக இருந்தது என்று மோவாயில் நிபுணத்துவம் பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கார்ல் லிபோ விளக்கினார். இவர் சிலைகள் எவ்வாறு நகர்ந்தன என்பது பற்றிய 2013ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஆய்வின் முதன்மை ஆசிரியராவார்.

கடல்சார் சிலையில் நிபுணத்துவம் பெற்ற கலிபோர்னியாவில் உள்ள மவுண்ட் சான் அன்டோனியோ கல்லூரியின் கலை வரலாற்றுப் பேராசிரியரான எலன் கால்டுவெல்லின் கூற்றுப்படி, ஐந்து டன் சிலைகள் குறித்து வெற்றிகரமாக நடத்திய முதல் ஆய்வு இதுவாகும்.

இத்தகைய 'நடக்கும்' சிலைகள் ராபா நுய் சமூகத்தின் வாய்வழி மரபுகளிலும் குறிப்புகள் உள்ளன. இது ராபா நுய் மொழியில் "நேகே நெகே" என்ற வார்த்தைக்கு 'கால் இல்லாமல் நடப்பது' என்று பொருள். இந்த சிலைகளை எவ்வாறு இயந்திரங்கள் இல்லாமல் நீண்ட தூரத்திற்கு நகர்த்தினார்கள் என்று கேட்டப்போது, இந்த சொற்றொடரையும் இதுபோன்ற வாய்வழி வரலாறுகளையும் ராபா நுய் பெரியவர்கள் பதிலளிக்கும் போது நினைவுபடுத்துகிறார்கள் என்று கூறுகிறார்.

இந்த சிலைகள் நடப்பதைப் பற்றிய கதைகளை, ராபா நுய் தீவைச் சேர்ந்த குழந்தைகளுக்கான பாடல்களும் கூறுகின்றன. இந்த மோவாய் 'நடப்பதற்கான' உதவியை, இயற்கையை மீறிய ஒரு சக்தி வழங்கியதாக முன்னோர்கள் கூறுகின்றனர்.

"மோவாய்கள் உச்சில் உள்ள தங்களின் இலக்குக்கு நடந்து சென்றது பற்றி தீவின் வாய்வழி மரபு பேசியது," என்று பாட்ரிசியா ராமிரெஸ் கூறினார். இவர் அவர் ஐந்து வயதிலிருந்தே ராபா நுய்யில் வசித்து வருகிறார். இப்போது அங்கு சுற்றுலா வழிகாட்டி பணிபுரிகிறார்.

"பாரம்பரியமாக, பாடல்கள், விளையாட்டுகள் மற்றும் கவிதைகள் மூலம் மட்டுமே தீவில் வரலாறு கடத்தப்பட்டதற்கு ஒரே வழி. மோவாய்கள் நடப்பது பற்றி பேசும் மூதாதையர் பாடல்கள் மற்றும் கதைகள் ஏராளமாக உள்ளன." என்று அவர் கூறுகிறார்.

உள்ளூர்வாசிகள் நீண்ட காலமாக சிலைகள் நடக்க வைக்கப்பட்டதைப் பற்றி பேசினாலும், வெளிநாட்டு வல்லுநர்கள் மோவாய் கொண்டு செல்வதற்கான இந்த வழியை ஏற்க இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலானது. அவர்கள், "இல்லை, இதற்கு வேறு வழிகள் இருந்திருக்க வேண்டும், இப்படி நடந்து இருக்க முடியாது' என்று உண்மையில் ஐரோப்பியர்களும், பிற ஆராய்ச்சியாளர்களும் சொல்வது போல் இருந்தது.நிறைய ஆட்களை கொண்டு சிலைகளை நகர்த்துவது தவிர வேறு வழிகள் பற்றி எங்களால் யோசிக்க முடியாது. இது உண்மையல்ல என்று தொல்பொருள் பதிவு உண்மையில் சுட்டிக்காட்டின," என்று லிபோ கூறினார்.

நவீன பயன்பாடு

பல நூற்றாண்டுகள் பழமையான மோவாய் 'நடக்க வைக்கப்பட்டு' கொண்டு சென்ற சாதனை இன்றும் பொறியாளர்களையும் விஞ்ஞானிகளையும் ஈர்க்கிறது: ஜனவரி 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், பண்டைய ராபா நுய் கல் செதுக்குபவர்களின் அதே நுட்பங்களைப் பயன்படுத்தி, நடக்கும் ரோபோக்களை உருவாக்க முயற்சி நடத்தது என்று குறிப்பிடப்பட்டது.

ஏறக்குறைய அனைத்து சிலைகளும் தீவின் கடற்கரையோரத்தில் வெவ்வேறு இடங்களில் உள்ள கல் பீடங்களுக்கு ( அஹுஸ் என அழைக்கப்படும்) கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு ரானோ ரராகுவின் எரிமலை குவாரியில் (Rano Raraku crater) உருவாக்கப்பட்டன.

குவாரியில் உள்ள முடிக்கப்படாத சிலைகள் மற்றும் தீவின் சாலைகளின் ஓரத்தில் கிடக்கும் கைவிடப்பட்ட சிலைகள், அதாவது நகர்த்தப்பட வேண்டியவை, அஹஸில் நிற்கும் சிலைகளுடன் ஒப்பிடப்பட்டன. அப்போது, ஆஹஸில் உள்ள சிலைகளின் தோள்பட்டை அகலத்தைவிட அவை அகலமான தோள்பட்டை கொண்டிருப்பதாக லிபோவின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அவை சுமார் 17 டிகிரி முன்னோக்கி சாய்ந்தன.

இந்த அம்சங்கள் மோவாய் 'மனிதர்களின் இயல்பான நடையின்' மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது. மோவாய் நடந்து நகர்த்தி செல்வதற்கு, கயிறுகள் உதவியாக இருந்து இருக்கும். அதன்பிறகு, அவை நிற்பதற்கு கல் செதுக்குபவர்கள் வடிவமைப்பு இருப்பார்கள்.

லிபோவின் கூற்றுபடி, இந்த சிலைகளை மரக்கட்டைகள் மூலம் உருட்டி செல்லவோ அல்லது இழுத்து செல்வதற்கு பதிலாக சிலைகளை 'நடக்க' வைத்தது நடைமுறையில் சாத்தியமானதற்கு காரணம். இந்த சிற்பகலைகளின் எடை, மரக்கட்டைகளை நசுக்கியிருக்கும். அதுவே இழத்து செல்லப்பட்டு இருந்தால், அதற்கு அதிக மனிதச்சக்தி தேவைப்பட்டு இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

மிகவும் குறைவான வளங்கள் உள்ள இந்த ஒதுக்கப்பட்ட தீவில், சிலைகளை நடக்க வைப்பதுதான் சிறந்த வழியாக இருந்திருக்கும். "மிகவும் குறைவான செலவில், மோவாய்களை உருவாக்கவும், நகர்த்தவும் முடிந்த பொறியியலை நீங்கள் கவனிக்க வேண்டும். ராபா நுய் சேர்ந்த மக்கள், தங்களின் ஒத்துழைப்பு மற்றும் கூர்மையான அறிவால் இதனை சாத்தியமாக்கினர்," என்று அவர் கூறுகிறார்.

ரானோ ரரகு எரிமலை வாயிலிருந்து அஹு டோங்கரிகிக்கு நான் நடந்த தூரம் 800மீட்டர் மட்டுமே. ஆனால், 88டன் மோவாய்களை வழிநடத்த முயற்சி செய்யவில்லை. நான் பார்த்த மற்ற சிலைகளை 18கி.மீ தொலைவில் இருந்தன. இது பண்டைய ராபா நுய் சமூகத்தினர் சாதித்த விஷயங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில், என்னுடைய பைக் பயணம் மிகவும் எளிமையான செயலாக இருந்தது.

இந்த நடக்கும் சிலைகளை உருவாக்கும்போது, அது பரிசோதனை முயற்சியாக இருந்து இருக்கும். தவறுகளும் நடந்திருக்கும் ஆனால், இவையனைத்தும் நகர்த்தி கொண்டு செல்வதற்கு சாத்தியமாகி இருக்காது. சில சிலைகள் பாதி வழியில் தடுமாறி விழுந்து இருக்கலாம்.

சிலை அதன் இலக்கை அடைந்ததும், அது நிமிர்ந்து நிற்கும் வகையில் மறுவடிவமைக்கப்பட்டவுடன், அது அதன் அஹுஸ் மீது உயர்த்தப்படும் என்று ராபா நுய் கலையில் நிபுணத்துவம் பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜோ ஆன் வான் டில்பர்க் கூறினார்.

மனிதனைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பது ராபா நுய்க்கு முக்கியமானது. ஏனெனில் மோவாய் இறந்தவர்களுக்கான சடங்குகளிலும், தலைவர்களை கெளரவிக்கவும் பயன்படுத்தப்பட்டது. "தங்கள் மூதாதையர்களை குறியீடாக நினைவுகூருவதில் மட்டும் அவர்கள் திருப்தியடையவில்லை. அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த உடல் உருவங்களை வைத்திருக்க விரும்பினர். அவர்களின் மூதாதையர்களின் முகங்களாக மோவாய் சிலைகள் உள்ளனர், " என்று அவர் மேலும் கூறினார்.

கல் செதுக்குபவர்கள் சிலைகளை கொண்டு செல்லும்போது, பாடல்களைப் பாடியிருக்கலாம் என்று லிபோ குறிப்பிட்டார். இதை உறுதிப்படுத்தும் வகையில் ராபா நுய் மக்களின் வாய்வழி வரலாற்றின் சிறிய குறிப்புகள் உள்ளன. காலனித்துவம் மற்றும் சமயப்பரப்புதல் காரணமாக நிறைய பாடல்கள் மற்றும் கதைகள் இழந்தன ஐரோப்பியர்களுடனான முதல் தொடர்பு அவர்களின் கலாச்சாரத்தை சீரழித்தது. அனைத்து பாலினேசிய தீவுகளிலும் இதே கதைதான்," என்று டில்பர்க் கூறினார்.

மோவாய் பற்றிய பல குழப்பமான கேள்விகளுக்கு அறிவியல் ஆராய்ச்சி பதிலளித்த போதிலும், வாய்வழி மற்றும் எழுதப்பட்ட வரலாறு இல்லாததால் ராபா நுய் சமூகம் வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மர்மக் கூறுதான், என்னைப் போன்ற பல நூற்றுக்கானக்கான பயணிகளை இந்த தொலைதூரத் தீவுக்கு அழைத்து வருகிறது.

அஹு டோங்கரிகியில் உள்ள 15 சிலைகளை நான் படம் பிடித்தேன். இந்த தெற்கு பாலினேசிய தீவின் பழங்கால சாலைகளில் நடந்து, இந்த மாபெரும் மோவாய் இன்று அசையாமல் அமைதியாக நிற்கின்றன. அவற்றின் கட்டுமானம் அவற்றின் கடந்தகால படைப்பாளிகளின் புத்தி கூர்மையைப் பேசுகிறது.

( இது பிபிசி ட்ராவல் தொடரில் வெளியான கட்டுரைகளில் ஒன்று)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: