வாட்ஸ்அப் புதிய வசதிகள்: குழுவில் இருந்து இனி சத்தமில்லாமல் விலகலாம்

    • எழுதியவர், லிவ் மெக்மஹோன்
    • பதவி, தொழில்நுட்பக் குழு

மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் செயலியில், பயனர்கள் தனியுரிமையை பாதுகாக்க புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வசதிகள் நேருக்கு நேர் நடக்கும் உரையாடல் போல மிகவும் பாதுகாப்பாகவும், தனிப்பட்ட முறையில் வாட்ஸ்அப் செயல்பட உதவும் என்று மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த புதிய வசதிகளில், என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதை இங்கு தொகுத்து வழங்கிறோம்.

  • பயனர்கள் தனிப்பட்ட முறையில் வாட்ஸ்அப் குழுவில் இருந்து விலகலாம். அதாவது, தற்போது உள்ள வசதியின்படி, ஒருவர் ஒரு வாட்ஸ்அப் குழுவை விட்டு வெளியேறினால், அக்குழுவில் உள்ள அனைவருக்கும் அவர் வெளியேறியது தெரியும். ஆனால், புதிய வசதியின் மூலம், அந்த குழுவை நிர்வகிக்கும் நபர்களை தவிர அதில் உள்ள நபர்களுக்கு தெரியாமல் ஒருவர் குழுவை விட்டு விலகலாம்.
  • "உலக அளவில் வேறு எந்த தகவல் சேவையும் அவர்களின் பயனர்களின் தகவல்கள், ஊடகங்கள், குரல்வடிவ தகவல்கள், வீடியோ அழைப்புகள் மற்றும் தகவல் காப்புப்பிரதிகளுக்கு (chat back-ups) இந்த அளவுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை," என்று இத்தயாரிப்பின் தலைவர் அமி வோரா தெரிவித்துள்ளார்.
  • மேலும், இந்த புதிய வசதி மூலம், செயலியில் தாங்கள் 'ஆக்டிவ்' வாக இருப்பதை குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பார்க்கும்படியோ அல்லது யாரும் பார்க்காமல் இருக்கும்படியான வசதிகளை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பயனர்கள் 'அமைப்புகளை' (செட்டிங்) மாற்றலாம்.
  • ஒருமுறை மட்டுமே பார்க்ககூடிய மெசேஜ்களை (View once messages), 'ஸ்கிரீன்ஷாட்' எடுக்கும் வசதி தடை செய்யப்பட்டுள்ளது.
  • இதுகுறித்து, தி அலான் டுரிங் இன்ஸ்டிடுட்டில் உள்ள இணை ஆய்வாளர் ஜானிஸ் வான்ங் கூறுகையில், இந்த வசதிகள் அனைத்தும் பயனர்கள் முழுவதும் அறிந்துகொண்டு, பயனப்படுத்தும் வரை, இதன் தாக்கத்தின் அளவு ஒரளவு மட்டுமே மதிப்பிட முடியும் என்றார்.

'ஸ்நாப்சாட்'டிலும் புதிய வசதிகள்

ஸ்நாப்சாட் செயலியும் பயனர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • இந்த நிறுவனம் Family Centre என்ற ஒரு பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்த செயலியில் தங்களின் குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோர்கள் கண்காணிக்க முடியும். தங்கள் குழந்தைகளின் நண்பர்கள் பட்டியல் மற்றும் அவர்கள் யாருடன் பேசுகிறார்கள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும்.
  • ஆனால், பெற்றோர்களும் குழந்தைகளும் செயலியில் இருக்கும் இதற்கான அழைப்பை ஏற்க வேண்டும்.
  • மேலும், தங்கள் குழந்தைகளின் பட்டியலில் யாரெனும் கவலையளிக்கும் வகையில் பயனர்கள் இருந்தால், அது குறித்து பெற்றோர்கள் நேரடியாக செயலியில் புகார் அளிக்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: