You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மனிதர்கள் ஏன் முத்தமிடுகின்றனர்? - அன்புக்கு காரணம் சொல்லும் அறிவியல்
மனிதர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது, அவர்களின் சுவாசம் ஆழமடைந்து சீரற்றதாக மாறும்; இதயத்துடிப்பு அதிகரிக்க தொடங்கும்; கண்கள் விரிவடையும். இது முத்தமிடும்போது பலரும் தங்கள் கண்களை மூடுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
முத்தமிடுவது பற்றி, ஒருவர் மூன்று விஷயங்களை தெரிந்துக்கொள்ளவேண்டும். முதலில், நம் உதடுகளுக்கு உணரும் திறன் அதிகம் இருப்பதால், தொடுதல் போன்ற அற்புதமான உணர்வு ஏற்படும்.
இரண்டாவது, நமது பிறப்புறுப்பில் உள்ள சில பகுதிகளைத் தவிர, நம் உடலில் உள்ள வேறு எந்த பகுதிகளை விடவும் நம் உதடுகளின் ஓரத்தில் அதிகமான நரம்பணுக்கள் உள்ளன.
மூன்றாவது, அதில் சுவை இருக்கிறது. ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனித்துவமான சுவை இருக்கும். சிலர் மற்றவர்களை விட சுவையை கண்டறிவதில் மிகவும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
பின்னர், அதில் ஒருவித வாசனையும் இருக்கும். ஓவிட் என்ற கவிஞர், தனது கவிதைகளில், மார்பில் பழுக்க வைக்கும் ஆப்பிள்கள் போன்றவை முத்தங்கள் என்று வர்ணிக்கிறார்.
நாம் ஏன் முத்தமிடுகிறோம் என்பதற்கு நிறைய கோட்பாடுகள் உள்ளன. ஆனால் அவற்றில், சில நாம் பூமியில் பிறக்கும்போது ஏற்படும் அனுபவங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
நாம் குழந்தைகளாக இருக்கும்போது, பெற்றோர் நம்மை முத்தமிடுக்கின்றனர். இதனால், நம் மூளையில் உள்ள நரம்பியல் வழிகள் மூலம் நேர்மறையான உணர்ச்சிகளுடன் பல உதடு தூண்டுதல்கள் (lip stimulations) தொடர்புபடுத்தப்படுகின்றன.
இதனால், முத்தத்திற்குக் காரணமான இந்த நரம்பியல் பாதைகளை உருவாக்குகிறோம்.
மேலும், அன்பும், அரவணைப்பும் மற்றும் பல அற்புதமான நிகழ்வுகள் நம் வாழ்வில் நிகழும்போது, நாம் அதனை வெளிப்படுத்த விரும்பினால், நாம் நம் உதடுகளைப் பயன்படுத்தி இவ்வாறு வெளிப்படுத்துகிறோம்.
மனிதர்களிடையே முதல் முத்தம் எப்போது, எங்கு, எப்படி நடந்தது என்பதைக் கண்டறியலாம். நாம் அறிந்தவரை, பிற உயிரினங்களில் அதன் பெண் இணைகள் உச்சக்கட்ட கருத்தரிப்புத் திறனைப் பெற்றிருக்கும்போது, அவர்களின் பிறப்புறுப்பு பகுதியால் ஈர்க்கப்படுக்கின்றன.
உதடுகளை 'பிறப்புறுப்பின் எதிரொலி' (Genital echo) என்று அழைக்கிறார்கள் என்று சில மானுடவியலாளர்கள் நினைக்கின்றனர். அவை பெண் பிறப்புறுப்புகளின் வடிவம், நிறம் மற்றும் அமைப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன.
பிரிட்டனின் விலங்கியல் நிபுணரான டெஸ்மண்ட் மோரிஸ், உதட்டுச்சாயம் குறித்து சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அவர் ஆண்களிடம் பெண்களின் முகங்கள் கொண்டிருக்கும் வெவ்வேறு படங்களை காட்டினார். அப்போது, ஆண்கள் மீண்டும் மீண்டும் உதடுகள் மிகவும் கவர்ச்சியாக இருக்கும் பெண்களையே தேர்தேடுத்தார்கள் என்று இவரது ஆய்வு காட்டியது.
நாம் உதடுகளுக்கும் சிவப்பு நிறத்துக்கும் ஈர்க்கப்படுவதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. ஒரு பாலியல் சமிக்ஞையை வெளிப்படுத்த பல இனங்கள் பயன்படுத்தும் நிறமே சிவப்பு. எந்த வகையான முத்தத்திற்கும் நாம் கண்டறிந்த ஆரம்பகால ஆதாரம் என்பது சுமார் 2,500, ஒருவேளை 3,500 ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கின்றன.
அது இந்தியாவில் இருக்கும் சில ஆரம்பகால வேத நூல்களில், உங்கள் கண்களுக்கு கீழே உள்ள பகுதியில் செபாசியஸ் (Sebaceous) சுரப்பிகள் உள்ளன என்றும், அது ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனித்துவமான வாசனையை உருவாக்குகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் இருந்த பண்டைய இந்தியர்கள் ஒருவரையொருவர் முகர்ந்து பார்த்தனர். அவர்கள் தங்கள் மூக்கையும், கன்னங்களையும் ஒருவருக்கொருவர் உரசி ஓட்டியபடி இருந்திருக்கலாம். அப்போது, யாரோ ஒருவர் நழுவி உதடுகளை அடைந்திருக்கலாம்.
அவர்களின் உதடுகள் மிகவும் உணர்திறன் கொண்டவையாக இருப்பதால், ஒருவரையொருவர் முகர்ந்து பார்ப்பதை விட இது மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருப்பதாக அவர்கள் கண்டறிந்திருக்கலாம். ரோமானியர்கள் உண்மையில் முதல் மிகப்பெரிய முத்த கலாசாரத்தை உருவாக்கினர் என்று கருதப்படலாம். அவர்கள் மூன்று விதமான முத்தங்களை ஒருவருக்கொருவர் கொடுத்தனர்.
இன்று நாம் பயன்படுத்தும் 'சலவா' என்ற வார்த்தை, அடிப்படையில் ஒரு பிரஞ்சு முத்தமாக அழைக்கப்பட்ட 'சேவியம்' என்ற பதத்தில் இருந்து வந்தது. அவர்கள் இதை அனைத்து சமயங்களிலும் செய்து மகிழ்ந்தனர். முத்தமிடுவது அருவருப்பானது என்று மக்கள் நினைக்கும் இடங்களும் உள்ளன. பெரும்பாலான மக்கள் பல் துலக்கவில்லை என்பதை நீங்கள் கருத்தில் கொண்டால், இதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இருப்பினும், அவர்கள் அதைச் செய்யாத இடத்தில் கூட, அவர்கள் முகர்ந்து பார்த்துக்கொண்டனர்; சுவைத்துக்கொண்டனர்; ஒருவருக்கொருவர் இணைக்கும் விஷயங்களைச் செய்தனர். அந்த பிணைப்புதான், இறுதியில், நம்மை ஒன்றாக வைத்திருப்பதற்கு முக்கியமானது.
நமது பிணைப்புகளை வலுவாக வைத்திருப்பதற்கும், நம் உடலில் உள்ள பல்வேறு ஹார்மோன்கள் மற்றும் நரம்பியக்கடத்திகள் (neurotransmitters) அனைத்தையும் அதிகரிப்பதற்கும், நமது நெருக்கமான உறவுகளை பராமரிக்கவும், முத்தமிடுவது என்பது ஒரு பெரிய பங்கு வகுக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்