You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிக் டாக்கை பார்த்து அஞ்சுகிறதா பேஸ்புக் நிறுவனம்?
நீங்கள் நிச்சயம் டிக் டாக் செயலியை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான பேஸ்புக்கிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறதா டிட் டாக்?
முதலில் டிக் டாக் குறித்து இரண்டு முக்கிய விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று நினைத்ததை விட அதிகளவு வருவாயை ஈட்டுகிறது டிக் டாக். இரண்டாவதாக இதனை கடுமையான போட்டியாக பார்க்கிறார் மார்க் சக்கர்பர்க்
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சேகரித்து தரவுகளின்படி, டிக் டாக்கின் உரிமையாளரான பைட்டான்ஸ் நிறுவனம், இந்தாண்டின் முதல் பாதியில் மட்டும் 7-8.4 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வருவாய் ஈட்டியுள்ளது. மொத்தமாக பார்க்கையில் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், ஜூன் மாதத்தில் லாபம் பார்த்து, இரண்டாவது அரையாண்டிலும் லாபம் பார்க்கும் நம்பிக்கையில் அந்நிறுவனம் இருக்கிறது.
டிக் டாக்கின் வளர்ச்சி குறித்து மார்க் சக்கர்பர்க் அவரது ஊழியர்களுடன் பேசுவது தொடர்பான காணொளி ஒன்று வெளியே கசிந்திருக்கிறது.
"சீனாவின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் பிரபலமைடந்துள்ள நுகர்வோர் செயலியாக இது இருக்கிறது. அமெரிக்காவில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கியுள்ளது. அதேபோல இந்தியாவிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் இன்ஸ்டாகிராமை காட்டிலும் டிக் டாக் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆம். இது சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கிறது." என்று அதில் மார்க் சக்கர்பர்க் கூறியிருக்கிறார்.
அதே போல ஒன்றை மெக்ஸிகோவில் சந்தைப்படுத்துவது குறித்தும் அதில் பேசியிருக்கிறார் மார்க். மெக்ஸிகோவில் இன்னும் டிக் டாக் அவ்வளவாக பிரபலமடையவில்லை.
இளைஞர்கள் மத்தியில் டிக்டாக் எவ்வளவு பிரபலமாக இருக்கிறது?
ஆராய்ச்சி நிறுவனமான AppAnnie, செயலிகள் எந்தளவிற்கு பயணாளர்களால் தரவிறக்கம் செய்யப்படுகின்றன என்பது குறித்து கண்காணிக்கிறது.
சீனாவிற்கு வெளியே, கடந்த ஆகஸ்டில் ஆண்ட்ராய்ட் பயணாளர்கள் டிக்டாக்கில் மொத்தம் 1.1 பில்லியன் மணி நேரங்கள் செலவழித்திருக்கிறார்கள். இது கடந்த ஆண்டை விட 400 மடங்கு அதிகம் என்கிறார் ஐரோப்பாவில் உள்ள இந்நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் பால் பார்னெஸ்.
இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் போடுவது அல்லது பேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் பதிவிடுவதுடன் ஒப்பிடும்போது, டிக்டாக்கிற்கு மக்களிடேயே இருக்கும் அர்ப்பணிப்பை பார்த்துதான் மற்ற சமூக ஊடக நிறுவனங்கள் கவலைப்பட வேண்டும் என்று அவர் தெரிவிக்கிறார்.
"ஒரு நல்ல டிக்டாக் வீடியோடிவை தயாரிக்க பல மணி நேரங்களை நீங்கள் செலவிட வேண்டியிருக்கும். ஆகவே நான் அந்த நிறுவத்தின் போட்டி நிறுவனமாக இருந்தால், பயணாளர்கள் டிக்டாக் செயலில் செலவிடும் நேரம், அதில் இருக்கும் அர்ப்பணிப்பு எனக்கு பொறாமையை ஏற்படுத்தும்" என்று அவர் கூறுகிறார்.
ஆனால், இந்த வேகமான வளர்ச்சி, அந்த செயலி பயன்படுத்துவதில் உள்ள பாதுகாப்பு குறித்த கவலையுடன் வருகிறது. டிக் டாக் வழியாக சில குழந்தைகளை தொடர்பு கொண்டு பாலியல் அச்சுறுத்தல் கொடுத்த பயணாளர்களின் கணக்குகன் இன்னும் மூடப்படவில்லை என்று இந்தாண்டு தொடக்கத்தில் பிபிசி நடத்திய புலனாய்வில் தெரிய வந்தது.
இந்த செயலி தொடர்பாக லண்டனில் சில இளைஞர்களிடம் கருத்து கேட்டோம். அவர் இதனை சுவாரஸ்யமான, கேளிக்கையான செயலி என்று விவரிக்கின்றனர்.
பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் குறித்து இளைஞர்கள் இவ்வாறு கூறுகிறார்களா என்று தெரியவில்லை. அதுவே மார்க் சக்கர்பர்கின் கவலையாக இருக்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்