You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கூகுள் - எழுத்துப்பிழையில் உருவான சுவாரஸ்ய வரலாறு - 23 முக்கிய தகவல்கள்
இன்றுடன் கூகுள் தொடங்கி 23 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நாளை ஒட்டி கூகுள் பற்றிய 23 சுவாரஸ்ய தகவல்கள்:
- கூகுள் உலகத்தின் அதிகம் பார்க்கப்பட்ட இணையதளம் ஆகும். பிங்கில் அதிகம் தேடப்பட்ட இணையதள பக்கம் ஆகும்.
- கூகுள் முதலில் லேரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் என்ற இரண்டு கல்லூரி மாணாவர்களால் தொடங்கப்பட்டது. இணைய தளங்களை தரவரிசைப் படுத்தும் ஒரு தளமாக இதை உருவாக்க விரும்பினர். ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தின் இணைப்பை எத்தனை இணைய தளங்கள் பகிர்கிறன்றன என்பதை அடிப்படையாக வைத்து இந்த தரவரிசை உருவாக்கப்பட்டது.
- கூகுள் என்ற சொல் கூகொல் என்ற சொல்லில் இருந்து வந்தது. இதன் பொருள் ஒன்றுக்கு பக்கத்தில் 100 பூஜ்ஜியம் போடுவதால் வரும் எண்ணைக் குறிப்பதாகும். எவ்வளவு தரவுகளை தாங்கள் தேட விரும்புகிறோம் என்பதைக் குறிக்கும் வகையில் இந்த பெயரை அவர்கள் பயன்படுத்தினர்.
- முதல் கூகுள் டூடுல் 1998 'burning man' நிகழ்வுக்காக உருவாக்கப்பட்டது. அந்த நாளில் மக்கள் ஏன் அலுவலகத்தை விட்டு வெளியே இருக்கின்றனர் என அனைவரும் அறிய வேண்டும் என கூகுளின் நிறுவனர்கள் எண்ணினர்.
- நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டறிந்ததற்கு போடப்பட்டது என்றும் நினைவிலிருக்கும் சில முக்கிய கூகுள் டூடுல்களில் ஒன்றாகும். ஜான் லெனனின் 70 வது பிறந்த நாளுக்கு வெளியான டூடுல் முதல் விடியோ டூடுல் ஆகும்.
- கூகுளின் தலைமை அலுவலகம் கூகுள்ப்ளெக்ஸ் என அழைக்கப்படும். இது கலிஃபோர்னியாவில் உள்ள சிலிகான் வேலியில் உள்ளது.
- கூகுளின் தலைமை அலுவலகத்தில் டி-ரெக்ஸ் டைனொசரின் பெரிய சிலை ஒன்று இருக்கும் அது அடிக்கடி ஃப்ளமிங்கோ பறவையால் முழுவதுமாக மறைக்கப்படும். கூகுள் எப்போதும் அழிந்துவிடக்கூடாது என்று ஊழியர்களுக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது இது என்று ஒரு வதந்தி இருக்கிறது.
- லெகோ எனப்படும் பிளாஸ்டிக் பொம்மை பாகங்களைக் கொண்டு செய்யப்பட்ட பெட்டியில்தான் கூகுளின் முதல் சர்வர் இடம் பெற்றிருந்தது.
- இந்த தலைமை அலுவலகம் மிகவும் பசுமையாக இருக்கும். அங்கே புல்லை சீர் செய்வதற்கு தோட்டக்காரர்களுக்கு பதிலாக ஆடுகள் இருக்கும்.
- தனது ஊழியர்களுக்கு விலையின்றி உணவு அளித்த முதல் பெரிய தொழில்நுட்ப நிறுவனம் கூகுள் ஆகும். ஊழியர்கள் தங்கள் செல்லப்பிராணியான நாய்களைக் கொண்டுவரவும் இங்கே அனுமதி உண்டு.
- கூகுள் இமேஜ் தேடுதல் 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது 2000ஆம் ஆண்டு ஜெனிஃபர் லோபஸ் ஜெர்மனி விருது விழாவில் அணிந்த பச்சை ஆடை அதிக தேடுதலில் இருந்தது. ஆனால் அதை பார்க்க வழியில்லாமல் இருந்தது.
- கூகுள் முதன் முதலில் தன்னுடைய இமெயில் சேவையை ஜிமெயில் என ஏப்ரல் 1 2004ஆம் தேதி வெளியிட்டதால் மக்கள் இதை ஏமாற்று என கருதினர்.
- மரியம் வெப்ஸ்டர் என்னும் அகராதியில் 2006ஆம் ஆண்டு கூகுள் என்னும் வார்த்தை இடம்பெற்றது. அதற்கு பொருள் கூகுளைப் பயன்படுத்தி தகவலைத் தேடி பெறுதல் என இருந்தது.
- 2006ல் யூடியூப் கூகுளின் ஒரு பகுதியானது. அது 1.5 பில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டது. இப்போது யூடியுப் 2 பில்லியன் மாதாந்திர பயனார்களை பெற்றுள்ளது. மேலும் 1 நிமிடத்திற்கு 400 மணிநேர விடியோக்கள் ஏற்றப்படுகின்றன.
- 2009ல் கூகுளின் ஒரு ப்ரோக்கிராமர் தவறுதலாக "/" என்ற குறியீட்டை கூகுளின் தடைசெய்யப்பட்ட இணையதளப் பதிவகத்தில் (பட்டியலில்) இணைத்தார். கிட்டத்தட்ட எல்லா இணைய தளத்தின் யு.ஆர்.எல். பெயரிலும் இந்த "/" குறியீடு இருக்கும் என்பதால் ஒரு இணைய தளத்தையும் கூகுள் வழியாகத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
- ஒவ்வொரு நாளும் கூகுளில் செய்யப்படும் 15% தேடல்கள் புதிதாக தேடப்படுபவையாகும். வேறு எதிலும் தேடப்படாதவையாகும்.
- ஏப்ரல் 2018ல் கூகுள் 100 சதவீத புதுபிக்கதக்க ஆற்றலை மட்டுமே பயன்படுத்தும் நிறுவனமானது. அதாவது ஒரு கிலோவாட் மின்சாரத்தை அது பயன்படுத்துகிறது எனில், அது மொத்தமும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்பட்டதாகும்.
- கூகுளுக்கு உண்மையில் 6 பிறந்த நாள்கள். ஆனால் அது செப்டம்பர் 27ஐயே தனது பிறந்ததினமாக கொண்டுவதற்கு தேர்ந்தெடுத்தது.
- சிறு சிறு தந்திரங்கள் கூகுளில் நிறைய இருக்கும். உதாரணமாக 'askew' என தேடினால் அது குதர்க்கமாக பதிலளிக்கும்.
- கூகுள் ஹோம்பேஜ் குறைந்தபட்சம் 80 மொழிகளில் வழங்கப்படுகிறது. ஹெளசா, இக்போ, வொருபா, சோமாலி, ஸூலு, மங்கோலியன், நேபாளி, பஞ்சாபி, மெளரி போன்ற மொழிகள் அதன் சமீபத்திய இணைப்புகள்.
- ஒரு கூகுள் தேடலின் முடிவைத் தருவதற்கான கணிப்பு ஆற்றலின் (Computing power) அளவு, அப்பல்லோ 11 கலன் மூலம் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்புதுவதற்குத் தேவைப்பட்ட கணிப்பு ஆற்றலின் அளவுக்கு சமம்.
- இப்போது கூகுள் வெறும் தேடுபொறியாக கருதப்படுவதில்லை. எதிர்கால வளர்ச்சிகள் உதாரணமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் , மற்றும் புதிய விளையாட்டு தளம், ஓட்டுநர் இல்லாத கார்கள் என அனைத்தையும் உள்ளடக்கியதே.
- லாரி பேஜ் (Larry Page) மற்றும் செர்கே பிரின் ஆகிய இரண்டு கல்லூரி மாணவர்கள் கூகுளை உருவாக்கினர். 1995-ஆம் ஆண்டில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் லாரி சேர்ந்தபோது, அவருக்கு கல்லூரியை சுற்றிக்காட்ட செர்கே கேட்டுக் கொள்ளப்பட்டார். பிறகு அவர்கள் நண்பர்களாகி, 'Backrub' என்ற தேடுபொறியை உருவாக்கினர். விரைவில் அது 'Backrub' - 'Googol' என மறுபெயரிடப்பட்டது. Googol என்பது எண் 1-ஐ தொடர்ந்து 100 பூஜ்ஜியங்கள் இருப்பதை விவரிக்க பயன்படுத்தப்படும் ஒரு கணித சொற்கூறு ஆகும். (Mathematical Term). அப்படியென்றால், Googol என்று தானே பெயர் இருந்திருக்க வேண்டும் என நீங்கள் கேட்கலாம். உண்மையில் Googol என்று தான் பெயர் வைக்க நினைத்துள்ளனர். ஆனால், லாரி பேஜ் அதன் எழுத்தை தவறாக எழுதியதால் 'Google' என வைத்து விட்டனர்.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆரின் கருத்துகள் திமுகவுக்கு ஆபத்தாக மாறுமா?
- CSK vs KKR: கடைசி பந்தில் வெற்றி; புள்ளிப் பட்டியலில் சென்னை முதலிடம்
- மோதியின் அமெரிக்க வருகைக்கு வெளிநாட்டு ஊடகங்கள் முன்னுரிமை தராதது ஏன்?
- பெண்ணின் இதயத்தை துளைத்த தோட்டா - ஆறு மாதங்களுக்குப் பிறகு மீட்ட மருத்துவர்
- உங்கள் உணவு ஊட்டச்சத்து மிக்கதா என அறிவது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்