You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாசாவின் ‘இன்சைட் ரோபோ’ செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செவ்வாய் கிரகத்தில் புதிய ரோபோ ஒன்றை தரையிறக்கியுள்ளது.
தி இன்சைட் (The InSight probe) எனப்படும் அந்த ரோபோ, செவ்வாய் கிரகத்தின் ஆழமான மற்றும் உள் பகுதிகள் குறித்து ஆராய்ச்சி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
பூமியை தவிர செவ்வாயில் மட்டும்தான் இது போன்ற ஆராய்ச்சி நடக்கிறது.
திங்கள்கிழமை மாலை 19:53 (ஜிஎம்டி) நேரப்படி இந்த ரோபோ செவ்வாயில் தரையிறங்கியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
தரையிறங்கும் முன்பு உள்ள முக்கியமான 7 நிமிட பரபரப்புக்கு பிறகு இந்த ரோபோ வெற்றிகமாக தரையிறங்கியது.
InSight பத்திரமாக தரையிறங்கியது உறுதியானவுடன், கலிஃபோர்னியாவின் ஜெட் உந்துவிசை ஆய்வகத்தில் உள்ள (ஜெபிஎல்) நாசாவின் கட்டுப்பாட்டு மையம் ஆரவாரம் மற்றும் கரகோஷத்தில் ஆழ்ந்தது.
இந்த ரோபோ இயந்திரம் செவ்வாய் கிரகத்தின் மத்திய ரேகை பகுதிக்கு அருகே உள்ள அலிசிம் பிளானீசியா என்ற பகுதியில் தரையிறங்கியது.
இன்சைட் ரோபோ தரையிறங்கிய சில நிமிடங்களில் நிலப்பரப்பின் முதல் புகைப்படம் மிக விரைவாக வெளிவந்துவிட்டது. அது ரோபோவின் சுற்றுப்புறங்களில் நிலவிய ஒரு தெளிவில்லாத மற்றும் அழுக்கான காட்சியைக் காட்டியது.
வரும் நாட்களில் இந்த நிலப்பரப்பின் தெளிவான படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :