You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
99 மில்லியன் ஆண்டுகளாக மரப் பிசினில் சிக்கியிருந்த தவளைகளின் படிமங்கள்
சுமார் 99 மில்லியன் (9 கோடியே 90 லட்சம்) ஆண்டுகளாக மரத்தின் பிசினில் சிக்கிக்கொண்டிருந்த தவளைகளின் உடல் படிமங்கள் வரலாற்றுக்கும் முந்தைய உலகம் குறித்ததகவல்களை கொடுக்கின்றன.
டைனோசர்கள் வாழ்ந்த காலத்திற்கு பிறகு தொடங்கிய காலம் முதல் இந்த தவளைகளின் உடல் படிமங்கள் பிசினில் தங்கியுள்ளன.
மழைக்காடுகளில் தவளைகள் மற்றும் தேரைகள் பரிணமித்து வளர்ந்தது குறித்த ஆய்வுகளுக்கு இந்த கண்டுபிடிப்புகள் ஒளியை பாய்ச்சுகின்றன.
மியான்மரின் ஆம்பேர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தவளைகளின் தோல், செதில், சில முழு உடல்கள் ஆகியவற்றை தொல்லுயிரியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் புவி அறிவியல் பல்கலைக்கழத்தை சேர்ந்த முனைவர் லிடா ஷிங் இந்தக் கண்டுபிடிப்பு ஓர் அற்புதம் என்று கூறியுள்ளார்.
இந்தத் தவளைகள் அழிவதற்கு முன்னர் வெப்ப மண்டல மழைக்காடுகளில் வாழ்ந்துள்ளன என்பதை இந்தப் படிமங்கள் உணர்த்துகின்றன என்று அவர் கூறுகிறார்.
வியட்நாமின் கச்சின் மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த நான்கு படிமங்கள் 'கிரிட்டேசியஸ்' எனப்படும் கிரீத்தேசியக் காலத்தில் காடுகளில் வாழ்ந்த உயிரினங்கள் குறித்த தகவல்களை அளிக்கின்றன.
தவளைகளின் படிமங்களை மட்டுமல்லாது ஆய்வாளர்கள் சிலந்தி, பூச்சிகள், தாவரங்கள் ஆகியவற்றின் படிமங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.
"இந்த புதிய தவளை படிமங்கள் ஏற்கனவே உள்ள இயற்கையின் புதிர்களில் கூடுதலாக சேர்ந்துள்ளன," என்கிறார் ஆக்ஸ்போர்டு இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் முனைவர் ரிக்கார்டோ பெரேஸ் டி லா பியூன்டே.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்