2020ல் பறக்கும் கார்கள் திட்டம் : ஊபெர் நிறுவனம் அறிவிப்பு

2020 ஆம் ஆண்டிற்குள் பறக்கும் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சர்வதேச டாக்ஸி நிறுவனமான ஊபெர் அறிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு தேவையான ஆரம்பகட்ட இணைப்புத் தொகுப்புக்களை அமெரிக்க நகரமான டல்லாஸிலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயிலும் அமைக்க உள்ளதாக உபெர் கூறியுள்ளது.

சில விமான நிறுவனங்கள் உடனான கூட்டு முயற்சியுடன் பறக்கும் டாக்ஸிகள் தயாரிக்கப்பட உள்ளன.

இந்த மின் சாதன வாகனங்கள் பூஜ்ய மாசு உமிழ்வுத் திறன் மற்றும் குறைந்த சத்தம் வெளிப்படுத்துவது மட்டுமின்றி செங்குத்தாக மேலெழும்பி தரையிறங்கும் திறன் படைத்தது என்று ஊபெர் கூறியுள்ளது.

மேலும், ஊபெர் காரில் பயணம் செய்ய ஆகும் செலவே இதற்கும் ஆகும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்தொழில்நுட்பம் பெரும்பாலும் நிரூபிக்கப்படவில்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்