You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விந்தணு தரம் குறைவு; செயற்கை முறை கருத்தரிப்பில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கும் வருமா ?
தரம் குறைந்த விந்தணுப் பிரச்சனையை சரிசெய்ய ஒரு குறிப்பிட்ட செயற்கை கருத்தரிப்பு முறையைப் பயன்படுத்தும் ஆண்கள் , அவர்களின் ஆண் குழந்தைகளுக்கும் அதே பிரச்சனையை கொடுக்கக்கூடும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
பிரஸ்ஸல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், செயற்கை முறையில் கருத்தரித்தல் (இன்விட்ரோ பெர்டிலைசஷன்-in vitro fertilization) தொழில் நுட்பம் மூலம் பிறக்கும் ஆண் குழந்தைகள், தரம் குறைந்த விந்தணு பிரச்சனையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது .
இன்ட்ரோ சைடோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்ஷன் (intra-cytoplasmic sperm injection) என்ற ஊசி மூலம் மூலம் ஒரு விந்தணுவை நேரடியாக ஒரு கரு முட்டையில் செலுத்தப்படும் தொழில்நுட்பம் செயற்கை முறையில் கருத்தரித்தலில் ஒரு வகையானதாகும்.
இவை எதிர்பாராத முடிவுகள் அல்ல என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், 1990 களின் ஆரம்பத்தில், இந்த வகை ஊசியேற்றுதல் தொழில்நுட்பம் மூலம் பிறந்த ஆண் குழந்தைகள், முதிர்ச்சி அடைந்தால் மட்டுமே இந்த முடிவுகளை உறுதிப்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டினர்.