குஜராத் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: புகைப்படத் தொகுப்பு

குஜராத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மோர்பியில் உள்ள தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 141 பேர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள். மோர்பியில் உள்ள மச்சு ஆற்றின் மீது 230 மீ (754 அடி) பாலம் 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது கட்டப்பட்டது. பாலம் பழுது நீக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு முன்பு திறக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: