மணிப்பூர் நிலச்சரிவில் உயரும் பலி எண்ணிக்கை: மனதை உலுக்கும் படங்கள்

மணிப்பூர் மாநிலத்தின் நோனி மாவட்டத்தில் மராங்சிங் ரயில்வே கட்டுமான பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 18இல் இருந்து 29 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ பகுதியில் இன்னும் 34 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணிப்பூர் மாநிலம் இம்பால்- ஜிரிபால் இடையில் நடைபெற்று வந்த ரயில்வே பாதை அமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அந்த இடத்தில்தான் பிரதேச ராணுவப்படையின் அலுவலகம் உள்ளது. கடந்த ஜூன் 29 புதன்கிழமை அன்று இரவு நடந்த நிலச்சரிவில் பாதுக்காப்புப்படை வீரர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சம்பவம் நடந்த இடத்திலிருந்து பிபிசியின் செய்தியாளர்கள் சல்மான் ராவி, மனிஷ் ஜால்வி ஆகியோர் அனுப்பிய படங்கள், நிலைமையை உங்களுக்கு தெளிவாக விளக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: