மணிப்பூர் நிலச்சரிவில் உயரும் பலி எண்ணிக்கை: மனதை உலுக்கும் படங்கள்

நேரம் செல்ல செல்ல இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்போர் பிழைத்திருப்பதற்கான வய்ப்புகள் குறைவு என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், MANISH JALUI

படக்குறிப்பு, நேரம் செல்ல செல்ல இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்போர் பிழைத்திருப்பதற்கான வய்ப்புகள் குறைவு என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மணிப்பூர் மாநிலத்தின் நோனி மாவட்டத்தில் மராங்சிங் ரயில்வே கட்டுமான பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 18இல் இருந்து 29 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ பகுதியில் இன்னும் 34 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணிப்பூர் மாநிலம் இம்பால்- ஜிரிபால் இடையில் நடைபெற்று வந்த ரயில்வே பாதை அமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அந்த இடத்தில்தான் பிரதேச ராணுவப்படையின் அலுவலகம் உள்ளது. கடந்த ஜூன் 29 புதன்கிழமை அன்று இரவு நடந்த நிலச்சரிவில் பாதுக்காப்புப்படை வீரர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சம்பவம் நடந்த இடத்திலிருந்து பிபிசியின் செய்தியாளர்கள் சல்மான் ராவி, மனிஷ் ஜால்வி ஆகியோர் அனுப்பிய படங்கள், நிலைமையை உங்களுக்கு தெளிவாக விளக்கும்.

மொத்தம் கிடைத்த 10 உடல்களில், பெரும்பாலும் பிராந்திய இராணுவ வீரர்கள் உள்ளனர்

பட மூலாதாரம், MANISH JALUI

படக்குறிப்பு, மொத்தம் கிடைத்த 10 உடல்களில், பெரும்பாலும் பிராந்திய ராணுவ வீரர்கள் உள்ளனர்
இதுவரை 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 18 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஐவர் ரயில்வே ஊழியர்கள்.

பட மூலாதாரம், MANISH JALUI

படக்குறிப்பு, இதுவரை 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 18 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஐவர் ரயில்வே ஊழியர்கள்.
மண் தற்போது சேறும் சகதியுமாக இருக்கிறது. எனவே எந்திரங்களும் பெரிதாக உதவவில்லை என்கிறார் மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங்.

பட மூலாதாரம், MANISH JALUI

படக்குறிப்பு, மண் தற்போது சேறும் சகதியுமாக இருக்கிறது. எனவே எந்திரங்களும் பெரிதாக உதவவில்லை என்கிறார் மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங்.
மழை பெய்யாமல் இருந்தால் மீட்புப்பணிகள் இன்னும் வேகமாக நடக்கும். ஆனால், அடுத்த 24 மணி நேரத்துக்கும் கனமழை இருக்கும் என்றூ கணிக்கப்பட்டுள்ளதுதான் கவலைக்குரியதாக இருக்கிறது.

பட மூலாதாரம், MANISH JALUI

படக்குறிப்பு, மழை பெய்யாமல் இருந்தால் மீட்புப்பணிகள் இன்னும் வேகமாக நடக்கும். ஆனால், அடுத்த 24 மணி நேரத்துக்கும் கனமழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதுதான் கவலைக்குரியதாக இருக்கிறது.
20 மீட்டர் ஆழம் வரை நிலச்சரிவுக்குள் சிக்கியிருப்பவர்களைக் கண்டறியும் திறனுள்ள, வெளிநாட்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கடுமையான மழைக்கிடையில், இந்த தொழில் நுட்பம் எப்படி பலனளிக்கும் என்று சொல்ல முடியாது என்கிறார் எஸ்.எம்.கான்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 20 மீட்டர் ஆழம் வரை நிலச்சரிவுக்குள் சிக்கியிருப்பவர்களைக் கண்டறியும் திறனுள்ள, வெளிநாட்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கடுமையான மழைக்கிடையில், இந்த தொழில் நுட்பம் எப்படி பலனளிக்கும் என்று சொல்ல முடியாது என்கிறார் எஸ்.எம்.கான்.
50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், வெளியிலிருந்து வந்து இந்த ரயில்வே பணிகளில் வேளை செய்தவர்களின் பெயர்கள் கிடைக்கவோ/ஆவணப்படுத்தப்படவோ இல்லை என்று உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், வெளியிலிருந்து வந்து இந்த ரயில்வே பணிகளில் வேலை செய்தவர்களின் பெயர்கள் கிடைக்கவோ/ஆவணப்படுத்தப்படவோ இல்லை என்று உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
அதாவது, அதிகாரிகள் சொல்வதை விட எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அதாவது, அதிகாரிகள் சொல்வதை விட எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: