பெட்ரோல் ரூ. 9.50, டீசல் ரூ.7, சிலிண்டர் ரூ.200 வரை குறைந்தது - நரேந்திர மோதி அரசின் புதிய அறிவிப்புகள் - பின்னணி என்ன?

பட மூலாதாரம், Reuters
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 9.50, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.7, சிலிண்டர் ஒன்றின் விலையை ரூ.200 வரை குறைத்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதன் மூலம் இந்த அறிவிப்பு சாத்தியமாகியிருக்கிறது.
இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீதான மாநில அளவிலான மதிப்புக் கூட்டு வரியைக் (VAT) குறைத்த அதேநேரம், மத்திய அரசு தமது பங்குக்கு வரியைக் குறைத்து மக்கள் சுமையைப் போக்க உதவவில்லை என்று பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் நீங்கலாக மற்ற மாநில அரசுகள் சமீப காலம் வரை குற்றம்சாட்டி வந்தன. இந்த நிலையில், மத்திய கலால் வரியைக் குறைக்கும் அறிவிப்பை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கிறார்.
பெட்ரோல் விலையை குறைக்கும் வகையில், அதன் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும் டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் மத்திய அரசு சனிக்கிழமை குறைத்திருக்கிறது.
இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50 வரையும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 வரையும் குறையும்," என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
மேலும் அவர், "அனைத்து மாநில அரசுகளையும், குறிப்பாக கடைசிச் சுற்றில் அதாவது 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வரி குறைப்பை மேற்கொள்ளாத மாநிலங்கள், இதேபோன்ற வரி குறைப்பைச் செயல்படுத்தி, சாமானியர்களுக்கு நிவாரணம் வழங்க நான் அறிவுறுத்த விரும்புகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் இந்தியாவில் ஒன்பது கோடி பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு (12 சிலிண்டர்கள் வரை) தலா 200 ரூபாய் வரை மானியமாக அரசாங்கம் வழங்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தமது புதிய அறவிப்பில் கூறியுள்ளார்.
"உலகளவில் உரங்களின் விலை உயர்ந்து வரும் போதிலும், இதுபோன்ற விலை உயர்விலிருந்து இந்திய அரசு விவசாயிகளைக் காப்பாற்றியுள்ளது. நிதிநிலை அறிக்கையில் உர மானியமாக ₹ 1.05 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக, மேலும் ₹ 1.10 லட்சம் கோடியை விவசாயிகளின் பணிகள் செழுமையடையும் வகையில் வழங்கப்படுகிறது," என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், NRIMALA SITARAMAN
மோதியை பாராட்டிய நிர்மலா
இந்தியாவின் இறக்குமதியைச் சார்ந்து அதிகம் தயாரிக்கப்படும் நெகிழி பொருட்களுக்கான மூலப்பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் மீதான சுங்க வரியையும் அரசாங்கம் குறைத்து வருவதாக நிர்மலா கூறியுள்ளார்.
"சில எஃகு மூலப்பொருட்கள் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும். சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவை தவிர, சிமென்ட் தடையின்றி கிடைப்பதை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
சமீபத்திய அறிவிப்பை வழங்க ஒப்புதல் வழங்கிய பிரதமர் நரேந்திர மோதியைப் பாராட்டியுள்ள அவர், "மத்தியில் ஆளும் அரசு, பிரதமர் நரேந்திர மோதி பதவியேற்றதிலிருந்து, ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவ நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதன் விளைவாக, எங்கள் ஆட்சிக் காலத்தில் சராசரி பணவீக்கம், முந்தைய அரசாங்கங்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. உலகின் பிற பகுதிகளைப் போலவே இந்தியாவும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டது. ஆனாலும் இந்திய அரசாங்கம் மக்கள் நலனுக்கான முன்னுதாரணமாக விளங்கியது," என்று நிர்மலா சீதாரான் குறிப்பிட்டார். குறிப்பாக பிரதமரின் கரீப் கல்யான் அன்ன யோஜ்னாவை இப்போது உலகமே அங்கீகரித்துப் பாராட்டுவதாகவும் நிர்மலா சீதாராமன் பெருமிதப்பட்டார்.
சவாலான சர்வதேச சூழ்நிலைகள் நிலவியபோதிலும், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்படாத நிலையை அரசு உறுதிப்படுத்தியதாகக் கூறிய அவர், ஒரு சில வளர்ந்த நாடுகள் கூட சில தட்டுப்பாடு அல்லது இடையூறுகளில் இருந்து தப்பாத நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்வதில் அரசு ஈடுபாடு காட்டி வருவதாகத் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பை மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் வரவேற்றுள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், "வரி குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர் மோதிக்கும் நிதியமைச்சருக்கும் மக்களின் சார்பாகவும் தமது மாநிலத்தின் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.
ஆனால், மத்திய அரசின் இன்றைய புதிய அறிவிப்புகளை எதிர்கட்சியான காங்கிரஸ் ஆதரிக்கவில்லை. நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு வெளிவந்த சில நிமிடங்களில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சூர்ஜேவாலா தமது ட்விட்டர் பக்கம் மூலம் எதிர்வினையாற்றினார்.
கடந்த இரண்டு மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து 100 ரூபாயை எட்டியது. அத்தகைய நிலையில், 9 ரூபாய் வரை தற்போது விலையைக் குறைப்பது நியாயமில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார் ரந்தீப் சூர்ஜேவாலா. மேலும் அவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி மத்தியில் இருந்தபோது இருந்த பெட்ரோல், டீசல் மீதான மத்திய கலால் வரி விலையையும் தற்போதைய விலையையும் ஒப்பிட்டு, அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து இடுகையை பதிவு செய்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
2014ஆம் மே மாதம் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 9.48 ஆக இருந்தது.
2022ஆம் ஆண்டு மே 21ஆம் தேதிவரை பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 27.90 ஆக இருந்தது. இதில் இப்போது ரூ. 8வரை குறைத்துள்ளீர்கள்.
இடைப்பட்ட காலத்தில் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ₹18.42 உயர்த்தி விட்டு இப்போது லிட்டருக்கு ₹8 குறைக்கிறீர்கள்.
காங்கிரஸ் ஆட்சியின்போது பெட்ரோல் மீதான கலால் வரி ரூ. 9.48 ஆக இருந்தது. இப்போதும் உங்களுடைய ஆட்சியில் கலால் வரி ₹19.90 ஆக இருந்தது. இதுவே காங்கிரஸ் ஆட்சியில் லிட்டருக்கு ₹9.48 ஆக இருந்தது.
டீசல் மீதான கலால் வரியை எடுத்துக் கொண்டால், 2014ஆம் ஆண்டு மே மாதம், அது லிட்டருக்கு ₹3.56 ஆக இருந்தது.
2022ஆம் ஆண்டு மே 21ஆம் தேதிவரை டீசல் மீதான கலால் வரி ₹21.80 ஆக இருந்தது. இதில் இப்போது ₹6வரை குறைத்துள்ளீர்கள்.
அதாவது இடைப்பட்ட காலத்தில் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ₹18.24 உயர்த்தி விட்டு, இப்போது அதில் லிட்டருக்கு ₹6 குறைத்துள்ளீர்கள்.
இப்போதும் உங்களுடைய ஆட்சியில் காங்கிரஸ் ஆட்சியின்போது இருந்த லிட்டருக்கு ரூ. 3.56 என்ற வரிக்கு மாறாக லிட்டருக்கு ₹15.80 கலால் வரி விதிக்கப்படுகிறது.
மக்களை ஏமாற்ற தேசத்திற்கு புள்ளிவிவரங்களின் சூழ்ச்சி தேவையில்லை. தேசத்திற்கு "போலி வாக்குறுதிகள்" தேவையில்லை.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 2014ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்தது போல, பெட்ரோல் மீது லிட்டருக்கு ₹9.48 என்ற அளவுக்கும் டீசல் மீது லிட்டருக்கு ₹3.56 என்ற அளவுக்கும் விலையை திரும்பப் பெற வேண்டும் என்று ரந்தீப் சூர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய மாதங்களில் அதிகரித்து வந்த எரிபொருள் விலை

பட மூலாதாரம், Getty Images
2022ஆம் ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தத் தொடங்கின. அப்போதை பெட்ரோல் விலை பல மாநிலங்களில் லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டியது. இது பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியையும் கொந்தளிப்பான சூழலையும் ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பின. பல மாநில அரசுகள் ஆதரவுடன் மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் முறையாக பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. அடுத்த வந்த நாட்களில் பெட்ரோல், டீசல் விலை கிட்டத்தட்ட தினமும் உயர்த்தப்பட்டது.
ஆனால், நவம்பர் 4ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தவில்லை.
2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி, டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 95.41 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ 86.67 ஆகவும் இருந்தது.
2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களால் தினசரி அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்தப் பின்னணியில் இந்தியாவில் உயர்த்தப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை, கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டு சமீபத்தில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.41 ஆக உயர்ந்தது.
தற்போது இந்திய அரசு அதன் வரம்புக்கு உட்பட்டு கலால் வரியைக் குறைத்த பிறகு டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.96 ஆக இருக்கும். இது பொதுமக்களுக்குப் பெரும் நிவாரணமாகக் கருதப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இந்த விலை கணிசமாக குறைந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












