உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தராகண்ட் சட்டமன்ற தேர்தல்: மார்ச் 10ஆம் தேதி முடிவுகள்

தேர்தல்

உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தராகண்ட் ஆகிய ஐந்து இந்திய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இந்த வருடம் பெறுகிறது.

ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி நடந்தது. ஏழாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு மார்ச் 7ஆம் தேதி நடைபெறும். ஐந்து மாநிலங்களுக்குமான தேர்தல் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும்

உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி நடந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் 62.4 சதவிகிதமும், பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 61 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.

கோவா மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்த வாக்குப்பதிவில் முறையே 79% மற்றும் 62% வாக்குகள் பதிவாகியுள்ளன.

உத்தராகண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல்
படக்குறிப்பு, பஞ்சாபில் பிப்ரவரி 14ஆம் தேதிக்கு பதில் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா சமயத்தில் தேர்தலை நடத்துவது சவலான ஒன்று என்றும் பாதுகாப்பான தேர்தலை நடத்துவதே முன்னுரிமை என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து 7 கட்டமாக தேர்தல்நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

மாநில வாரியாக வாக்குப்பதிவு தேதி எப்போது?

உத்தர பிரதேசத்திற்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் மணிப்பூர் மாநிலத்திற்கு இரு கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

உத்தராகண்ட், கோவா ஆகிய 3 மாநிலங்களுக்கு பிப்ரவரி 14 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்துக்கு பிப்ரவரி 14 அன்று கட்டமாக தேர்தல் நடக்கும் என்று அறிவித்திருந்த தேர்தல் ஆணையம், பின்னர் வாக்குப்பதிவை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு மாற்றியது.

5 மாநில சட்டமன்ற தேர்தலில் பஞ்சாபில் காங்கிரஸ், ஆளும் கட்சியாகவும் நான்கு மாநிலத்தில் தற்போது பாஜக ஆளும் கட்சியாகவும், இருக்கக் கூடிய சூழலில் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேசம் ( 403 தொகுதிகள்)

  • முதல் கட்டம் - பிப்ரவரி 10
  • இரண்டாம் கட்டம் - பிப்ரவரி 14
  • மூன்றாம் கட்டம் - பிப்ரவரி 20
  • நான்காம் கட்டம் - பிப்ரவரி 23
  • ஐந்தாம் கட்டம் - பிப்ரவரி 27
  • ஆறாம் கட்டம் - மார்ச் 3
  • ஏழாம் கட்டம் - மார்ச் 7

மணிப்பூர் (70 தொகுதிகள்)

முதல்கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 27

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 3

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் சில முக்கிய தகவல்கள்

  • தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
  • 5 மாநிலங்களில் மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
  • தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆன்லைன் முறையிலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.
  • வாக்குப்பதிவு, ஒரு மணிநேரம் கூடுதலாக நடைபெறும்
  • தேர்தல் வெற்றிக்குப் பிறகு எந்த ஒரு அரசியல் கட்சிகளும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபடக் கூடாது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: