ஹர்ஷ்வந்தி பிஷ்ட்: மலையேற்றத்தில் சிகரம் தொட்ட பெண் பேராசிரியர் கதை

    • எழுதியவர், ராஜேஷ் டோபரியால்
    • பதவி, பிபிசி ஹிந்தி சேவைக்காக டேராடூனில் இருந்து

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஹர்ஷ்வந்தி பிஷ்ட் மலையேற்றத்தில் பிரபலமானவர். அர்ஜூனா விருதை வென்ற இவர், சமீபத்தில் நாட்டின் மிகப்பெரிய மலையேற்ற அமைப்பான இந்தியன் மவுன்டனியரீங் ஃபோன்டேஷனின் (ஐ.எம்.எஃப்) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐ.எம்.எஃப்பின் முதல் பெண் தலைவராவர் மேலும், உத்தரகாண்டில் இருந்து ஐ.எம்.எஃப்பின் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் மலையேறுபவரும் இவரே.

பொருளாதார பேராசிரியரான ஹர்ஷ்வந்தி பிஷ்ட், ஐ.எம்.எஃப்பின் பொருளாதார நிலையை மேம்படுத்த விரும்புகிறார். மேலும், மலையேறுபவர்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும் அதிகம் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளார். பிபிசி ஹிந்தியுடனான உரையாடலின் போது தனது திட்டங்களை அவர் விவரிக்கிறார்.

எவரெஸ்ட் மலைக்காகப் போட்டியிடுவது அர்த்தமற்றது

ஐ.எம்.எஃபை பலப்படுத்துவதும், மலையேற்றத்தை வலுப்படுத்துவதுமே தனது நோக்கம் என்று டாக்டர் பிஷ்ட் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில், "இன்றைய காலத்தில் எவரெஸ்டுக்கான போட்டி நடக்கிறது; இந்த போட்டியில் எதுவும் இல்லை; இதில் மலையேறும் நுட்பமும் இல்லை; சவாலும் இல்லை; ஏனென்றால் அங்கு அனைத்தும் அலங்கரிக்கப்பட்டுள்ளன; நீங்கள் யாரையாவது பற்றிக்கொண்டு மலையேற வேண்டியதுதான்", என்கிறார்.

"அங்கு (எவரெஸ்ட்டில்) உயரம் குறைவான மலைகள் உள்ளன; ஆனால், மலையேறுவது மிகவும் கடினம். மலையேறிகளின் உத்திகளையும் அது சோதிப்பதாக உள்ளன. இதனால், இந்த மலை மீது உலகம் முழுவதும் உள்ள மலையேறிகளுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. ஏனென்றால் அங்கு சுவாரஸ்சியமும் சவாலும் உள்ளன", என்கிறார்.

மலையேறிகளுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டும். ஏனென்றால், உயரமான மலைகளில் குப்பைகள் சேர்ந்து வருகின்றன. நாம் மலைகளை மேம்படுத்தவில்லை என்றாலும், குறைந்தபட்சம் அதனை அசுத்தமாக்காமல் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மலையேறிகளுக்கு இருக்க வேண்டும்.

ஐ.எம்.எஃப்பின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் திட்டம்

ஐ.எம்.எஃப்பின் தலைவர் தேர்தலின்போது, அதன் பொருளாதார நிலையை மேம்படுத்துவதாக ஹர்ஷ்வந்தி பிஷ்ட் உறுதியளித்தார். ஒருவேளை, அதனாலே அவர் வெற்றியும் பெற்றிருக்கலாம்.

தற்போது விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சகத்திடமிருந்து மட்டுமே ஐ.எம்.எஃப்புக்கான பொருளாதார உதவி கிடைக்கிறது. மலையேறிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து மற்ற அமைச்சகங்களிடம் இருந்தும் பொருளாதார உதவி பெறுவதே இவரின் நோக்கம். இமயமலையில் சுற்றுலாவுக்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்; அதனால், சுற்றுலா அமைச்சகத்திடமும் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

உலகம் முழுவதும் புவி வெப்பமடைதல் பற்றியும் காலநிலை மாற்றம் குறித்தும் விவாதங்கள் நடந்துவருகின்றன என்று டாக்டர் பிஷ்ட் கூறுகிறார். அதன் பாதிப்பு இமயமலையில் தெரிகிறது. அறிவியல் மற்றும் தொலைநுட்பத்திற்கான அமைச்சகத்திலும் பேச்சுவார்த்தை நடத்துவேன். இதைத் தவிர, பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளும் இளைஞர்களுக்குச் சாகசக் கூட்டுக்குழுக்களை (Adventure Clubs) நிறுவவும் திட்டம் உள்ளது. இதற்காக உயர்கல்வி அமைச்சகத்திடமும் பேசவிருக்கிறேன்.

அரசுடனும், குழும நிறுவனங்களுடனும், சாகச கூட்டுக்குழுக்கள் மூலமாகவும் ஐ.எம்.எஃப்பின் புதிய தலைவர் திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறார். இதனால், பலரும் மலையேறிவதை மேற்கொள்ளமுடியும். எவ்வளவு அதிகமான கூட்டுக்குழுக்களை நிறுவ முடிகிறதோ, அவ்வளவு அதிகமான புதிய மலையேறிகளை உருவாக்க முடியும்.

சுற்றுச்சூழல் பற்றின கவலை

சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதற்கு மலையேறுபவர்களும் காரணம் என்று டாக்டர் ஹர்ஷ்வந்தி பிஷ்ட் கூறுகிறார். உள்ளூர் மக்கள் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மரங்களை வெட்டுக்கின்றனரா? அல்லது சுற்றுலா பயணிகள் காடுகளை சேதப்படுத்திக்கின்றனரா?. இதனால், கங்கோத்ரி பாதையில் உள்ள போஜ்வாசா காடு கிட்டதட்ட அழிந்துவிட்டது.

சக மலையேறிகளின் வழியாக, போஜ்வாசா மற்றும் சிட்வாசா காடுகளின் நிலையைப் பார்க்கும்போது, டாக்டர் பிஷ்டுக்கு இவ்வாறு தோன்றுகிறது. சுற்றுச்சூழல் அழிந்துவிட்டால், மலையேறுபவர்கள் எவ்வாறு காப்பாற்றபடுவார்கள்? இதனால், அவர் 'கங்கோத்ரியை காப்பாற்றுங்கள்' என்ற பெயரில் ஒரு திட்டம் தொடங்கினார். இதில், போஜ்வாசாவில் கிட்டதட்ட 12 ஆயிரம் மரக்கன்றுகளை அவர் நட்டார். அதில், 7000 மரக்கன்றுகள் செழிப்பாக உள்ளன.

அவரின் இந்த முயற்சியின் விளைவாக, போஜ்வாசாவில் தற்போது பலவகையான பறவைகளும் உயிரினங்களும் காணப்படுகின்றன என்று அவர் கூறுகிறார். அங்கு அவர் பனிச்சிறுத்தையையும் பார்த்திருக்கிறார். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவில்லை எனில், சுற்றுலா திட்டங்களால் என்ன பயன்? மலையேறுபவர்கள் எங்கே..அவ்வளவு ஏன்? மனித வாழ்க்கையையே பாதுகாக்க முடியாது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது என்று அவர் வலியுறுத்துகிறார்.

மலையேறுபவரும் ஆசிரியருமான ஹர்ஷ்வந்தி

பௌரி கர்வால் மாவட்டத்தில் பிரொன்கால் (Bironkhal) பகுதியிலுள்ள சூராய் கிராமத்தில் டாக்டர் ஹர்ஷ்வந்தி பிஷ்ட் பொருளாதார பேராசிரியராக இருந்தார். அதன்பின்னர், உத்தரகாஷியிலுள்ள பி.ஜி கல்லூரியில் தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் முதலில் கல்வித்துறையிலும், பின்னர் மலையேறுபவராக மாறியதும் வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். அவர் கல்வித்துறையில் இருந்ததாலே, மலையேற்றம் குறித்த அறிமுகம் கிடைத்தது என்றே கூறலாம்.

எம்.ஏ முடித்த பின்னர், கர்வால் பல்கலைகழகத்தில் பொருளாதார பிரிவின் செய்தி தொடர்பாளராக அவருக்கு பணி கிடைத்தது. இதன் பிறகு, அவர் சுற்றுலா குறித்து பி.எச்.டி படிக்க தொடங்கினார். அதில் மலை தொடர்பான சுற்றுலா குறித்து கவனம் செலுத்தினார். இதன் மூலம், அவர் புதிய இடங்களை காண மலையேற தொடங்கினார். அவருக்கு மலையேற்றம் மிகவும் பிடித்துப்போகவே, அதனை தொடர்ந்து செய்ய தொடங்கினார்.

கிட்டதட்ட 40 ஆண்டு காலமாக கல்வித்துறையிலும், மலையேற்றத்திலும் அவர் செயல்பட்டுவருகிறார்.

டாக்டர் ஹர்ஷ்வந்தி பிஷ்ட் தற்போது டேராடூனில் வசிக்கிறார். மலையேற்றத்துடன் சுற்றுச்சூழல், சமூக பிரச்னைகள் தொடர்பாகவும் அவர் செயல்பட்டுவருகிறார்.

'பெண்களின் தன்னம்பிக்கை வளரும்'

உத்தரகாண்டில் பெண்களின் உரிமைகளுக்காகச் செயல்பட்டுவரும் சமூக ஆர்வலர் கீதா கைரோலா. இவர் அரசின் பெண்கள் நலன் அமைப்பின் தலைவராகவும் உள்ளார். ஐ.எம்.எஃப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹர்ஷ்வந்தி, பெண்களுக்காக, சுற்றுச்சூழலுக்காக, மலையேற்றத்துக்காக நிறைய திட்டங்களைச் செயல்படுத்துவார் என்று இவர் கூறுகிறார்.

பெண்களுக்குப் பதவி கிடைத்தாலும், அவர்கள் பணி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்று கீதா கைரோலா கூறுகிறார்.

ஆனால், ஹர்ஷ்வந்தி விஷயத்தில் அப்படி அல்ல; அவர் ஐ.எம்.எஃப்பின் பொருளாதார நிலையை மேம்படுத்துவார்; மலையேற்றத்தை வலுப்படுத்துவார்; சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகச் செயல்படுவார்; நம்புங்கள்! அவர் இவையெல்லாம் நிச்சயம் செய்வார் என்று கீதா தெரிவிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :