You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
6 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை - ஏன் நடந்தது இந்த சம்பவம்?
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆறு வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் ஏன் நடந்தது?
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோட்டையூர்-சின்னையம்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் துவரங்குறிச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு மூன்று மகள்கள், ஹரிஹர தீபன் (6) என்ற மகன் உள்ளனர். கடந்த ஞாயிற்றுகிழமை ராமகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி வெளியூர் சென்று விட்டனர். இந்நிலையில் இரவு வீட்டின் அருகே உள்ள உறவினரின் வீட்டு மாடியில் சிறுவன் ஹரிஹர தீபன் மர்மமான முறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தான்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜமுரளி, சார்பு ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட காவலர்கள் இறந்த சிறுவனின் உடலை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தை மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
அதனைதொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரிக்கும் பணி நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கழுத்தறுத்து கொலை செய்த மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் போலீசார் நடத்த விசாரடையில் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் அதே பகுதியை சேர்ந்த சிறுவனின் உறவினரான அஜய்ரத்தினம் மீது போலீசாருக்கு சந்தேகம் எற்பட்டது.
இதனையடுத்து அஜய்ரத்தினத்தை பிடித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுவனை கொலை செய்ததை அஜய் ரத்தினம் ஒப்புக்கொண்டார். சிறுவனை கொலை செய்த அஐய்ரத்தினத்தை கைது செய்த போலீசார் மேலும் இக்கொலை வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் ஒருவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட சிறுவனின் அக்காவின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பியதாக அஜய் ரத்தினத்தின் மீது காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர் என்றார்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சமூக வலைதளங்களில் படங்களை பரப்பியது அஜய்ரத்தினம் என தெரியவந்தது. இந்த விவகாரத்தில் உறவினரான அஜய் ரத்தினத்தின் எதிர்காலம் பாதிக்கப்படும் என கருதி ராமகிருஷ்ணன் வழக்கை வாபஸ் பெற்றதாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த அஜய்ரத்தினம் ஞாயிற்றுகிழமை சிறுவன் ஹரிஹர தீபனுக்கு கொய்யா பழம் தருவதாக கூறி அருகே உள்ள உறவினர் வீட்டு மாடிக்கு அழைத்துச் சென்றதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
மொட்டை மாடியில் சிறுவனின் இரு கைகளை பிடித்துக்கொண்டு வாயில் துணியை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளளதாக அஜ்யரத்தினம் தங்களிடம் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹரிஹர தீபன் நீண்ட நேரமாக வீட்டுக்கு திரும்ப அதை அடுத்து அவரது அம்மா என்றும் பார்த்தபோது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்ததாக காவல்துறையினர் கூறினர்.
பிற செய்திகள்:
- காலநிலை மாற்றத்துக்கு காரணமான துறையின் 503 பேர் COP26 மாநாட்டில் பங்கேற்பு
- திருவள்ளுவரை கிறிஸ்தவராக காட்டுவது ஏன்? தமிழ் ஆர்வலர்கள் முன்வைக்கும் அதிர்ச்சிப் பின்னணி
- இன்ஸ்டாகிராம்: வரமா, சாபமா?
- ஆப்கானிஸ்தானை நம்பிய இந்தியக் கனவு தகர்ந்தது
- சென்னையில் கனமழை; 2015ஆம் ஆண்டு திரும்புகிறதா?
- சராசரி மனிதருக்கு உரியதை போல 30 மடங்கு கார்பன் உமிழும் 1% பணக்காரர்கள் - ஆய்வில் அம்பலம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்