பவானி தேவி: “ஒலிம்பிக்கில் போட்டியிட்ட தினத்தை மறக்கவே முடியாது”

காணொளிக் குறிப்பு, “விமர்சனங்கள் வந்தால் அதை நேர்மறையாக எதிர்கொள்ள வேண்டும் என்றே நினைத்தேன்”

"ஒலிம்பிக் என்பது என்னுடைய பல வருட கனவாக இருந்தது. ரியோ ஒலிம்பிக்கில் தகுதி பெற கடுமையாக பயிற்சி செய்தேன் ஆனால் முடியவில்லை. அதுவே டோக்யோ ஒலிம்பிக்கில் தகுதி பெறுவதற்கான உத்வேகத்தை அளித்தது" என்கிறார் தமிழகத்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ. பவானி தேவி.

டோக்யோ ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற முதல் வீராங்கனை பவானி தேவி.

டோக்யோ ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்பை தவறவிட்டிருந்தாலும், அடுத்த பாரிஸ் ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்லும் முனைப்புடன் பயிற்சியில் ஈடுபடபோவதாக தெரிவிக்கிறார்.

காணொளி தயாரிப்பு: விஷ்ணுப்ரியா ராஜசேகர்

ஒளிப்பதிவு: ஜெரின் சாமூவேல், ஜனார்த்தனன்.எம்

படத்தொகுப்பு: ஜெரின் சாமூவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :