You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"வீட்டிலேயும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் வந்துவிட்டது" - அரசு
கொரோனா குறித்த அண்மைய செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கொரோனா இரண்டாம் அலை பரவும் இந்த சூழலில் வீடுகளிலும் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
"ஒரு குடும்பத்தில் தொற்று ஏற்பட்டிருந்தால், அந்த நபர் வீட்டிலும் மாஸ்க் அணிய வேண்டியது அவசியம். ஏனென்றால் வீட்டில் உள்ள பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோன்று வீட்டில் யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றாலும், மாஸ்க் அணிய வேண்டியது அவசியம் என்றே நான் கூறுவேன்," என நிடி ஆயோக் குழுவின் சுகாதாரக் குழு உறுப்பினரும், மருத்துவருமான வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
"அனைவருக்குமான தடுப்பூசிகளை மத்திய அரசே வழங்க வேண்டும்": தமிழக அரசு
கொரோனா தடுப்பூசிகளுக்கென 35 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அனைவருக்குமான தடுப்பூசிகளை மத்திய அரசே மாநில அரசுகளுக்கு வாங்கித்தர வேண்டுமென இந்தியப் பிரதமர் மோதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
"கோவிட் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்டத்திற்கென புதிய கொள்கையை மத்திய அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்தப் புதிய கொள்கையின்படி, 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளே மாநில அரசுகள் அளிக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசிகளை மாநில அரசுகள் முன்பே நிர்ணயிக்கப்பட்ட விலையில் வாங்க வேண்டியுள்ளது. இது இந்திய அரசு தடுப்பூசிகளை வாங்க அளிக்கும் விலையைவிட முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. ஏற்கனவே சில தயாரிப்பாளர்கள் மாநில அரசுகளுக்கென கூடுதல் விலை நிர்ணயித்து அறிவித்துள்ளனர்.
இம்மாதிரி வெவ்வேறுவிதமான விலை நிர்ணயம் செய்வது மாநில அரசுகளுக்குக் கூடுதல் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால், இது நியாயமற்றது. மத்திய அரசோடு ஒப்பிடுகளையில் மாநில அரசுகளிடம் மிகக் குறைவான நிதி ஆதாரமே உள்ளது. கோவிட் - 19 தடுப்பூசிகளுக்கென 2021-22 பட்ஜெட்டில் 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், மூன்றாம் கட்ட தடுப்பூசித் திட்டத்திற்காக தடுப்பூசிகளை மத்திய அரசு வாங்கி அளிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் எதிர்பார்ப்பது சரியாகவே இருக்கும்.
ஆகவே இந்தப் பின்னணியில், எல்லா வயதினருக்குமான தடுப்பூசிகளை மத்திய அரசே வாங்கி அளிக்க வேண்டும். வரும் வாரங்களில் தடுப்பூசி அளிப்பது சிறப்பான முறையில் நடப்பதற்கு ஏதுவாக, தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது உள்ளிட்ட வாய்ப்புகளையும் மத்திய அரசு ஆராய வேண்டும்" என முதலமைச்சர் தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் உற்பத்தியாகும் கோவிஷீல்ட், கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகளுக்கு, அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் விலைகளைச் சமீபத்தில் அறிவித்தன. அதன்படி மத்திய அரசுக்கு ஒரு விலையும் மாநில அரசுகளுக்குக் கூடுதல் விலையும் தனியாருக்கு அதைவிட கூடுதல் விலைகளும் அறிவிக்கப்பட்டிருந்தன.
பிற செய்திகள்:
- ஆஸ்கர் 2021: நோமேட்லேண்ட் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் க்ளோ கவ் - ஹைலைட்ஸ்
- ஐபிஎல் 2021 போட்டிகளிலிருந்து பிரேக் எடுக்கும் அஸ்வின் - என்ன ஆச்சு?
- கொரோனா வைரஸ்: "இந்தியாவில் மே மாதம் 38-48 லட்சத்தை தொடும் பாதிப்புகள்"
- ஆஸ்கர் 2021: நோமேட்லேண்ட் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் க்ளோயி சாவ் - ஹைலைட்ஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: