You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: நகர்ப்பகுதிகளில் தலைக்கவசம் அணிய விலக்கு
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அந்த கட்சியின் தலைவர் ரங்கசாமி, ராஜ்பவன் தொகுதி தேர்தல் பிரசாரத்தின் போது கோயில் வாசலில் திறந்த வேனில் நின்றபடி வெளியிட்டார்.
இதில் பெட்ரோல் - டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரை குறைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற சில முக்கிய அறிவிப்புகளை இங்கே தொகுத்தளிக்கிறோம்:
- புதுச்சேரி நிதி பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
- புதுச்சேரி மாநிலத்தின் கடனான 8,863 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
- 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.
- மருத்துவ, பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.
- புதுச்சேரி மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம் அமைக்கப்படும்.
- புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறை பாடப் பிரிவுகளில், உள்ளூர் மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்க மத்திய அரசிடம் அரசாணை பெறப்படும்.
- புதுச்சேரியில் புதிதாக ஒரு மாநிலப் பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.
- அனைத்து குடும்பங்களுக்கும் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
- பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இலவச பொறியியல் மருத்துவம் கல்வி கிடைக்க வழிவகை செய்யப்படும்.
- கடந்த 5 ஆண்டுகளில் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்களுக்கு உதவும் விதமாக, அரசுப் பணியில் சேர்வதற்கான வயது உச்சவரம்பு 40 வயதாக தற்போதைக்கு (One time relaxation) உயர்த்தப்படும்.
- புதுச்சேரியில் ஓராண்டுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.
- நகராட்சி பகுதிகளில் தலைக்கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கப்படும்.
- நியாய விலை கடைகள் மீண்டும் திறக்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படும்.
- தனியார் தொழிற்சாலையில் 80 சதவீதம் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
- பெட்ரோல் - டீசல் விலை 2 ரூபாய் குறைக்கப்படும்.
- குப்பை வரி ரத்து செய்யப்படும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம்.
- காவலர்களுக்கு 8 மணி நேரப் பணி நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
- முந்தைய ஆட்சியில் முடக்கப்பட்ட 'காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம்' உயிர்ப்பித்து 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும். தற்போது கட்டுமானப் பணி முடியாத வீடுகளுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
- காலாப்பட்டு, கிருமாம்பாக்கம் பகுதிகளில் கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் அமைக்கப்படும்" உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
பிற செய்திகள்:
- வட மாவட்டங்களை குழப்புகிறதா வன்னியர் இடஒதுக்கீடு? ராமதாஸை கொதிக்க வைத்த ஓ.பன்னீர்செல்வம்
- எப்படி இருக்கிறது வட தமிழ்நாடு? தேர்தலைத் தீர்மானிக்கும் சிக்கல்களின் நிலவரம் என்ன?
- கருத்துக் கணிப்பு மூலம் கருத்துத் திணிப்பு: தொண்டர்களுக்கு மடல் எழுதும் இபிஎஸ், ஓபிஎஸ்
- "10.5% உள்ஒதுக்கீடு ஓட்டுக்காக நடத்தப்படும் நாடகம்" - குற்றம்சாட்டும் மு.க. ஸ்டாலின்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: