பாஜகவில் இணைந்தார் திமுக எம்.எல்.ஏ.

திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன் பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகனை சந்தித்து பாஜக உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொண்டார்.

கடந்த முறை தாம் வெற்றி பெற்ற திருப்பரங்குன்றம் தொகுதியை திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியுள்ளதால் அதிருப்தி அடைந்த சரவணன் அந்தக் கட்சியில் இருந்து விலகினார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக நேரடியாக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 61 இடங்களில் தனது கூட்டணி கட்சி வேட்பாளர்களை களமிறங்கியுள்ளது.

தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் தங்கள் கட்சியை சேர்ந்த 15 பேருக்கு இந்த முறை வாய்ப்பு தரப்படவில்லை. வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களில் ஒருவரான சரவணன், தற்போது பாஜகவில் சேர்ந்துள்ள நிலையில் அந்தக் கட்சியின் சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சரவணனுக்கு எதிரான குரல்களும் பாஜகவில் ஒலிக்கத்தொடங்கியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :