யார் இந்த திஷா ரவி? இவர் கைதானது ஏன்? - இணையத்தில் குவியும் ஆதரவும், எதிர்ப்பும்

பட மூலாதாரம், Facebook
இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஸ்வீடனைச் சேர்ந்த செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பர்க் ட்விட்டரில் பகிர்ந்த `டூல்கிட்` தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த மாணவியும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான செயலாளருமான 22 வயதாகும் திஷா ரவி பிப்ரவரி 13ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அறிவித்ததை அடுத்து, அவர் குறித்த தகவல் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது.
இந்த நிலையில், திஷா ரவியின் பின்னணி குறித்தும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாகவும், அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் எழும் கருத்துகள் குறித்தும் இங்கு பார்ப்போம்.
யார் இந்த திஷா ரவி?
பெங்களூரைச் சேர்ந்த 22 வயதான சூழலியல் செயற்பாட்டாளரான திஷா ரவிதான், கிரேட்டா துன்பர்க்கின்' ஃப்ரைடேஸ் ஃபார் ஃப்யூச்சர்' என்கிற அமைப்பை இந்தியாவில் நிறுவியவர்.
"நான் திஷா ரவியோடு பல கூட்டங்களில் பேசி இருக்கிறேன். எனக்கு அவரை தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் திஷா ரவி ஒரு முறை கூட சட்டத்தை மீறி நடந்ததில்லை. எல்லா அமைப்பு சார்ந்த நிகழ்ச்சிகளையும் விதிமுறைக்கு உட்பட்டுதான் நடத்தினார், நடந்து கொண்டார்" என பெங்களூரைச் சேர்ந்த தாரா கிருஷ்ணசாமி என்ற செயற்பாட்டாளர் பிபிசியிடம் கூறினார்.

"திஷா ரவி நகைச்சுவை உணர்வுமிக்க பெண். அவர் எப்போதும் கூட்டங்களுக்கு தாமதமாக வருவது எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் நாங்கள் எதையும் அவரிடம் வெளிப்படுத்தியதில்லை. காரணம் அவர் செய்யும் விஷயத்தில் அவருக்கு இருந்த விருப்பம்" என்று தனக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமோ என்றால் அச்சத்தால் பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு செயற்பாட்டாளர் கூறினார்.
"சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக 'மரங்களைக் காப்போம்' பிரசாரத்தின் போதுகூட, முறையாக காவலர்களிடம் அனுமதி வாங்கித் தான் பிரசாரத்தை நடத்தினார்" என மற்றொரு பெயர் குறிப்பிட விரும்பாத செயற்பாட்டாளர் கூறினார்.
திஷா ரவி குறித்து பிபிசி தொடர்பு கொண்ட பல இளைஞர்களும் தங்களுக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை பாய்ந்துவிடுமோ என்கிற பயத்தில் பேச மறுத்தனர் அல்லது அழைப்புகளை எடுக்கவில்லை.
கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த சுற்றுச்சுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு 'ஃப்ரைடேஸ் ஃபார் ஃப்யூச்சர்' அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த ஜூன் 2020இல் அந்த அமைப்பின் இணையதளம் முடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்தியாவில் மக்களுக்கு எதிரான சட்டங்களால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எதிர்ப்புக் குரல்கள் நசுக்கப்படும் நாட்டில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இ.ஐ.ஏ என்கிற சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், 'ஃப்ரைடேஸ் ஃபார் ஃப்யூச்சர்' அமைப்பில் இருப்பவர்கள் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டிருக்கிறோம். மக்களை ஒரு லாப நோக்கோடு பார்க்கும் அரசாங்கத்துக்கு, சுத்தமான காற்று, சுத்தமான தண்ணீர், வாழ்வதற்கு ஒரு பூமி போன்றவைகளைக் கேட்பதுகூட தீவிரவாத செயலாகத் தான் கருதும்" என திஷா ரவி autoreportafrica.com என்கிற இணையத்தளத்திடம் பேசியிருந்தார்.
'டூல் கிட்' என்றால் என்ன? அதனால் என்ன பிரச்சனை?

பட மூலாதாரம், Getty Images
போராட்டங்கள் நடத்தும் போது, அதில் பங்கேற்பவர்கள் செய்ய வேண்டிவை என்ன என்பதைக் குறிப்பிட பயன்படுத்தப்படும் ஒருவகை செயல்திட்டமே 'டூல்கிட்'. பொதுவாக எந்தவொரு போராட்டத்தின் போதும், 'டூல் கிட்' பகிரப்படுவது வழக்கம் தான்.
இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகப் பாப் பாடகி ரிஹானா ட்விட்டரில் பதிவிட்ட பின், ஸ்வீடனைச் சேர்ந்த மாணவியும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான செயற்பாட்டாளருமான கிரேட்டா துன்பர்க் தமது ட்விட்டர் பக்கத்தில் 'டூல்கிட்' ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
அந்த ட்விட்டர் பதிவில் இந்தியாவில் களத்தில் உள்ள மக்களால் இந்த டூல்கிட் புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதன் பின்பு அதை தமது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி இருந்தார்.
பிப்ரவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பதிவுகள் மூலம் 'ட்விட்டர் புயல்' உருவாக்குவது, போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புகைப்படம் மற்றும் காணொளிகளை வெளியிடுவது ஆகியவை கிரேட்டா துன்பர்க்கின் 'டூல்கிட்டில்' வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதானி, அம்பானி போன்ற பெருநிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக செயல்படுவது, அரசு அதிகாரிகள் மற்றும் அரசை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கு விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் கோரிக்கை வைப்பது, பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அவரருக்கு அருகில் இருக்கும் இந்தியத் தூதரகம், ஊடக நிறுவனம் அல்லது உள்ளூர் அரசு அலுவலகம் ஆகியவற்றின் அருகே போராட்டம் நடத்துவது உள்ளிட்டவையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.
கிரேட்டா துன்பர்க் பதிவிட்டிருந்த 'டூல்கிட்' இந்திய அரசுக்கு எதிராக செயல்பட விரும்பும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் சதி என்றும் கிரேட்டா தன்னுடைய பதிவு மூலம் காலிஸ்தான் பிரிவினைவாதத்தை தூண்டும் சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்றும் டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
திஷா ரவி மீது என்ன புகார்?

பட மூலாதாரம், Facebook
கிரேட்டா துன்பர்க் பகிர்ந்த 'டூல்கிட்டில்' இருந்த, குற்ற நடவடிக்கை எடுக்க தகுந்த தகவல்கள் வெளியில் கசிந்ததால்தான் திஷா ரவி, அதை நீக்குமாறு கிரேட்டாவிடம் கூறினார் என டெல்லி காவல்துறை தெரிவிக்கிறது.
திஷா ரவி இந்த 'டூல்கிட்டை' உருவாக்கியதில் முக்கிய சதியில் ஈடுபட்டவர் என்று தெரிவித்துள்ளது டெல்லி காவல்துறை. இது தொடர்பாகவே சமீபத்தில் திஷா ரவி கைது செய்யப்பட்டார்.
காலிஸ்தான் ஆதரவு 'பொயட்டிக் ஜஸ்டிஸ் ஃபவுண்டேஷன்' எனும் அமைப்புடன் இணைந்து இந்திய அரசுக்கு எதிரான வெறுப்புணர்வை பரப்பும் வகையில் திஷா செயல்பட்டார் என்று டெல்லி காவல்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன் திஷா ரவியை, காவல்துறை தங்கள் காவலில் எடுத்து ஐந்து நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தாம் அந்த 'டூல்கிட்டை' உருவாக்கவில்லை என்றும், போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க மட்டுமே விரும்பியதாகவும் திஷா ரவி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
'டூல்கிட்டில்' சில மாற்றங்களைச் செய்ததாக, திஷா ரவி தங்களிடம் ஒப்புக் கொண்டதாக டெல்லி காவல் துறை கூறியுள்ளது.
சமூக வலைதளங்களில் திஷா ரவிக்கு ஆதரவும், எதிர்ப்பும்
இவ்வாறாக திஷா ரவிக்கு எதிரான வழக்குகள் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, மறு பக்கம் இணையத்தில் திஷா ரவிக்கான அதரவும் எதிர்ப்பும் பெருகிக் கொண்டே வருகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
"புர்ஹான் வானிக்கு 21 வயது, அஜ்மல் கசாபுக்கு 21 வயது. வயது வெறும் ஓர் எண் தான். யாரும் சட்டத்துக்கு மேல் கிடையாது. சட்டம் தன் கடமையைச் செய்யும். குற்றம் குற்றமே" என பெங்களூரைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர், பி.சி. மோகன் தன் ட்விட்டர் பக்கத்தில் திஷா ரவி என்ற ஹேஷ்டேகுடன் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
"தேச விரோத விதை யாருடைய மனதில் இருந்தாலும் அதை அழித்துவிட வேண்டும். அது திஷா ரவியாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி" என ஹரியாணா மாநிலத்தில் அமைச்சராக இருக்கும் அனில் விஜ் என்பவர் ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.
மறுபுறம், திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவ சேனா உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், நடிகர்கள் என திஷா ரவியைக் கைது செய்தது குறித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
"21 வயது திஷா ரவியைக் கைது செய்திருப்பது, இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட எதிர்பாராத தாக்குதல். நம் விவசாயிகளை ஆதரிப்பது குற்றமல்ல" என ட்விட் செய்து தன் ஆதரவைத் தெரிவித்திருந்தார் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
"திஷா ரவி கைது செய்யப்பட்டது மிகவும் மோசமான செயல். இந்திய சமூகம் எந்த அளவுக்கு கீழ் நோக்கிச் சென்றிருக்கிறது என்பதைப் பாருங்கள். சுற்றுச்சூழல் தொடர்பாகவும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததற்காகவும், அரசை எதிர்த்துப் பேசியதால் ஒரு பெண் கைது செய்யப்படுகிறாள்" என திஷா ரவிக்கு தன் ஆதரவையும், அரசின் கைது நடவடிக்கைக்குத் தன் எதிர்ப்பையும் தெரிவித்திருக்கிறார் வரலாற்று ஆசிரியர் ராமசந்திர குஹா. என்.டி.டி.வி தொலைக்காட்சிக்கு அவர் கொடுத்த பேட்டியை தன் ட்விட்டர் பக்கத்தில் ரீட்விட் செய்திருக்கிறார் அவர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
"21 வயது சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவி கைது செய்யப்பட்ட பின் 56 இன்ச் மார்புடையவர் பாதுகாப்பாக உணர்கிறாரா அல்லது ஸ்வீடனைச் சேர்ந்த 18 வயது கிரேட்டா துன்பர்க்கிடமிருந்தும் பாதுகாப்பு வேண்டுமா?" என்று காட்டமாக தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
"திஷா ரவிக்கு நிபந்தனையின்றி என் ஆதரவை வழங்குகிறேன். உங்களுக்கு இப்படி நடந்ததற்கு நான் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் எல்லோரும் உங்களோடு இருக்கிறோம். தைரியமாக இருங்கள். இந்த அநியாயம் கடந்து செல்லும்" என்று தனது ஆதரவைப் பகிர்ந்திருக்கிறார் நடிகர் சித்தார்த்.
இதுபோல ட்விட்டர் முழுக்க, திஷா ரவிக்கு ஆதரவும் எதிர்ப்புமாக ஹேஷ்டேகுகள் டிரெண்டாகிக் கொண்டிருக்கின்றன.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: