பாஜக தலைவருக்கு கொரோனா: பரிசோதனையில் தொற்று உறுதியானது என தகவல்

பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை இந்தியில் பகிர்ந்த அவர், தமக்கு கொரோனா ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தததாகவும், அதன் பிறகு பரிசோதனை செய்ததில் தொற்று உறுதிப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

தமது உடல் நிலை நன்றாக இருப்பதாகவும், டாக்டர்கள் கூறியதன் பேரில் வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டு எல்லா அறிவுரைகளையும் பின்பற்றிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த சில தினங்களில் தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை செய்துகொள்ளும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: