வடிவேல் பாலாஜி உடல் அடக்கம்: நடிகர்கள் உதயநிதி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி

உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று உயிரிழந்த சின்னத்திரை பிரபல நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதி அஞ்சலிக்காக சென்னை சேத்துப்பேட்டில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு திரையுல பிரபலங்கள், ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

திமுக இளைஞர் அணி தலைவரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் விஜய்காந்தின் மகன் விஜய் பிரபாகரன், நடிகர்கள் ரோபோ சங்கர், பாலாஜி, விஜய் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ராமர் உள்ளிட்டோர் வடிவேல் பாலாஜியின் வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய் சேதுபதி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் நிதி உதவியும் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, சேத்துப்பட்டில் உள்ள வடிவேல் பாலாஜியின் வீட்டில் இருந்து நுங்கம்பாக்கம் இடுகாட்டுக்கு அவரது உடல், அவசர ஊர்தியில் வைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க ஊர்வலத்தின் இறுதி வரை சென்றனர்.

முன்னதாக, ஒரு திறமைமிக்க நடிகரின் திடீர் இறப்பு குறித்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன் என நடிகர் தனுஷ் தமது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.

நடிகர் விவேக், ""சின்னத்திரையில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய வடிவேல் பாலாஜியின் மறைவு பேரதிர்ச்சியாகவுள்ளது" என தெரிவித்திருந்தார்.

நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆத்மிகா, நடிகர்கள் பிரசன்னா, சாந்தனு ஆகியோரும் வடிவேல் பாலாஜியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள் மகேந்திரன், விவேக், பிரசன்னா, சாந்தனு, நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆத்மிகா , காயத்திரி ரகுராம், போன்றோரும் தங்களது டிவிட்டர் பக்கங்களில் வடிவேல் பாலாஜிக்கு இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்

நடிகை காயத்ரி ரகுராம் "வடிவேல் பாலாஜி இனி இல்லை என்பது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. மிகவும் திறமையான நபர். அனைவரையும் சிரிக்க வைத்தவர். துரதிருஷ்டவசமாக மிக விரைவில் இறந்தது அதிர்ச்சியளிக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

நடிகை ஆத்மிகா தனது டிவிட்டர் பக்கத்தில் "வடிவேல் பாலாஜியின் திடீர் மறைவைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. திறமையான கலைஞர் இன்று இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரசன்னா தனது டிவிட்டர் பக்கத்தில் "வடிவேல் பாலாஜியின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்" என்று கூறியுள்ளார்".

அவருடன் கலக்கப்போவது யாரு குழுவில் பணியாற்றிய ராமர், ரக்ஷன், திவாகர், தங்கதுரை, சேது, பழனி, கோதண்டம், முல்லை, பாலா, போன்றோர் போன்றோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். கிரேஸ் கருணாஸ், நிஷா, மதுரை முத்து, மணிமேகலை போன்றோரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: