You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: 5 லட்சத்தை கடந்த பாதிப்பு, சர்வதேச அளவில் 4வது இடம்
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஐந்து லட்சத்தை தாண்டி உள்ளது.
அதிகபட்சமாக ஒரே நாளில் 18552 பேர் பாதிக்கப்பட்டதை அடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 508953 ஆக உயர்ந்துள்ளது என்கிறது ஏ.என்.ஐ செய்தி முகமை.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 384 பேர் பலியாகி உள்ளனர் என்கிறது இந்திய சுகாதார அமைச்சகம்.
சர்வதேச நிலவரம்
சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
சர்வதேச அளவில் 9,778,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 4,93,674 பேர் பலியாகி உள்ளனர் என்கிறது ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள்.
பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாம் இடத்தில் ரஷ்யாவும், அதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவும் உள்ளன.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 125,039 பேரும், பிரேசிலில் 55,961 பேரும், பிரிட்டனின் 43,498 பேரும் பலியாகி உள்ளனர் என்கிறது ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழகம்.
இதுவரை 4,932,392 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் ஆகிடிவ் கேஸ்
இந்தியாவில் ஆக்டின் கேஸ்களின் எண்ணிக்கை 197387 ஆக உள்ளது என்கிறது இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம்.
இதுவரை 15685 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: