You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
’கொரோனா வைரஸுடன் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும்’ - இந்திய சுகாதாரத் துறை
கொரோனா வைரஸுடன் நாம் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இன்று தனது வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய லாவ் அகர்வால், இந்தியாவில் 216 மாவட்டங்களில் ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை என்று தெரிவித்தார்.
கொரோனா சிகிச்சைக்காக கிட்டத்தட்ட 5200 ரயில் பெட்டிகளை, ரயில்வேத்துறை தயார் செய்து வருவதாகவும் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.
''கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட முடக்கநிலையை தளர்த்துவது தொடர்பாகவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்புவது குறித்தும் நாம் தற்போது பேசி வருகிறோம். அதேவேளையில் இந்த வைரஸுடன், இந்த சூழலில் வாழ நாம் பழக வேண்டும் என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்'' என்று லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை நமது செயல்பாடுகளில் மாற்றங்களாக கொண்டு வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
கொரோனா வைரஸ் தொடர்பாக வெளியிடப்பட்ட மருத்துவ ரீதியிலான அறிவுரைகளை கடைப்பிடித்தால், மற்றும் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது என வெளியிடப்பட்டதை சரியாக பின்பற்றினால் இந்தியா கொரோனா எண்ணிக்கையில் உச்சத்தை எட்டாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.
அவ்வாறு கடைப்பிடிக்காவிட்டால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3390 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக லாவ் அகர்வால் தெரிவித்துளளார்.
அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 1273 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் 16,540 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், 37, 916 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 29.36 சதவீதமாக உள்ளது.
இதுவரை இந்தியாவில் 216 மாவட்டங்களில் ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை.
கொரோனா சிகிச்சைக்காக கிட்டத்தட்ட 5200 ரயில் பெட்டிகளை, ரயில்வேத்துறை தயார் செய்து வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: