You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் ஊரடங்கு: இந்தியா என்ன செய்ய வேண்டும் - நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி ஆலோசனை
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மற்றும் அதற்கான தீர்வு குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜியுடன் காணொலிக்காட்சி வாயிலாக உரையாடினார்.
அவர்களின் உரையாடலில் அபிஜித் பேசிய முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
- வங்கி கடன்களுக்கான வட்டி அல்லது ஈ.எம்.ஐ-யை மூன்று மாதங்களுக்கு செலுத்த வேண்டும் என கூறப்பட்டது ஒரு புத்திசாலித்தனமான முடிவுதான். ஆனால் அரசால் இன்னும் அதிகமாகச் செய்ய இயலும். அந்த தொகையை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்திருக்கலாம் அது மக்களுக்கு மேலும் உதவியாக இருந்திருக்கலாம்.
- நோயின் தீவிரத்தை பொறுத்தே ஊரடங்கு கட்டுப்பாடுகளை விலக்குவது குறித்து தீர்மானிக்க முடியும். அதிகளவிலான மக்கள் நோயுற்று கொண்டிருக்கும்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது.
- மக்களுக்கு தற்காலிகமான ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு அதன்மூலம் அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கலாம். ஒரு மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக கொடுத்துவிட்டு அதன்பிறகு யாருக்கு தேவையோ அதை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பது போல திட்டம் வகுக்கலாம்.
- ஜன் தன் கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு பணம் வழங்கலாம். ஆனால் பலரிடம் அந்த கணக்குகள் இல்லை குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம். எனவே இந்த மாநில அரசுகளின் திட்டங்கள் மூலமாக மக்களுக்கு உதவிகள் சென்றடைவதை நாம் மேற்கொள்ளலாம்.
- சிறு மற்றும் குறு தொழில்களை மட்டும் இலக்கு வைப்பது சரியான தீர்வாக இருக்காது. அவர்கள் தயாரிக்கும் பொருட்களை மக்கள் வாங்குவதற்கு அவர்கள் கையில் பணம் வேண்டும். மக்கள்பொருட்களை வாங்கினால் மட்டுமே பொருளாதாரம் வளர்ச்சியடைய முடியும்.
- புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை மாநில அளவில் முடிவுகளை அனுமதிக்க வேண்டும். ரயில்வே மற்றும் விமானம் போன்ற முடிவுகளை மாநில அரசால் எடுக்க முடியாது ஆனால் மாநில அரசால் இதனை எளிதில் கையாள முடியும்.
- இந்தோனீசியாவில் மக்களுக்கு பணம் வழங்க முடிவு செய்யப்பட்டது; ஆனால் அவை யாருக்கும் சென்றடைய வேண்டும் என உள்ளூர் குழுக்களே முடிவு செய்யும். அவர்களுக்கு தெரியும் யாருக்கு உண்மையான தேவைகள் என்று.
- இம்மாதிரியான ஓர் அதீத நெருக்கடியான சமயத்தில் துணிச்சலாக செயல்படுவதே ஒரே வழி.
- மக்கள் கைகளில் பணம் வழங்குவதே பொருளாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கான ஒரே வழி. இதில் நாம் அமெரிக்காவின் வழியை பின்பற்றலாம்.
- ஊரடங்கிற்கு பிறகு இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை மீள் கட்டமைப்பது குறித்து நாம் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: