அமெரிக்க பெரும் முதலீட்டாளர் வாரன் பஃபெட்: தனது பங்களை ஏன் விற்றார் தெரியுமா? - இதுதான் காரணம்

பங்குகளை விற்ற பெரும் முதலீட்டாளர் வாரன் பஃபெட்

அமெரிக்காவின் மிகப்பெரிய செல்வந்தரும், முதலீட்டாளருமான வாரன் பஃபெட்டுக்கு சொந்தமான பெர்சைர் ஹாத்வே நிறுவனம், அமெரிக்காவின் நான்காவது பெரிய விமான நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த அனைத்து பங்குகளையும் விற்றுவிட்டது. கொரோனாவின் காரணமாக அமெரிக்க விமான போக்குவரத்து தள்ளாட்டத்தில் இருக்கும் போது இந்த முடிவினை வாரன் பஃபெட் எடுத்துள்ளார். விமான துறையில் முதலீடு செய்ததன் மூலம் தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக பஃபெட் முன்பு தெரிவித்து இருந்தார்.

காணொளி மூலம் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், "நமக்கு பெரிய நஷ்டம்தான். இருந்தபோதிலும் விமான துறையில் முதலீடு செய்திருந்த அனைத்து பங்குகளையும் விற்றுவிட்டேன். எதிர்காலத்தில் நமது பணம் முழுவதையும் அந்த துறை மென்று முழுங்கிவிடும் என நினைக்கிறேன். இப்படியான துறையில் முதலீடு செய்ய முடியாது," என்று கூறினார்.

வாரன் பஃபெட்டின் நிறுவனம் 2016ஆம் ஆண்டிலிருந்துதான் விமான துறையில் முதலீடு செய்கிறது. பெர்சைர் ஹாத்வே நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 50 பில்லியன் டாலர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 3,000ஐ தாண்டியது

தமிழகத்தில் இன்று (மே 3) ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023ஆக உயர்ந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, இன்று கொரோனா தாக்கத்தால் ஒருவர் இறந்துவிட்டார் என்பதால் தமிழகத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. புதிதாக இன்று 38 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1379ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ்: ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது அனைவருக்கும் கட்டாயமா?

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உலகின் அனைத்து நாடுகளைப் போலவே, இந்தியாவும் பொது முடக்கநிலை முறையை பின்பற்றியுள்ளது. மார்ச் 25 முதல் நாட்டில் முடக்கநிலை அமலில் உள்ளது. தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அரசு, தொற்று பரவாமல் தடுப்பதற்காக தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது. இந்திய அரசு ஏப்ரல் 2ம் தேதி ஆரோக்கிய சேது செயலியை அறிமுகப்படுத்தியது.

ஆழ்கடல் பகுதியில் பெருமளவில் பிளாஸ்டிக் கழிவுகள் கண்டெடுப்பு

இதுவரை இல்லாத வகையில் கடலின் படுக்கையில் அதிகபட்ச நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இத்தாலிக்கு அருகிலுள்ள மத்தியத் தரைக் கடலின் அடிப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட படிவுகளில் இந்த மாசுபாடு காணப்பட்டது. மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வில், ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பில் 1.9 மில்லியன் பிளாஸ்டிக் துகள்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டன.

முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுகிறோமா?

கொரோனா பெருந்தொற்றின் போது நாட்டில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும், அவர்களை தனிமைப்படுத்தும் முயற்சிகளும் அதிகரித்துள்ளன. முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டிக்காரர்களிடம் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கும் இதுபோன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: