ஊரடங்கு உத்தரவால் உணவில்லாமல் குழந்தைகளை ஆற்றில் வீசிய தாய்? - உண்மை என்ன? #BBCFactcheck

மஞ்சுதேவி

பட மூலாதாரம், twitter/badoi police

படக்குறிப்பு, மஞ்சுதேவி
    • எழுதியவர், உண்மை சரிபார்க்கும் குழு
    • பதவி, பிபிசி

ஞாயிற்றுக்கிழமையன்று டிவிட்டரில் ஒரு செய்தி பலரால் பகிரப்பட்டது. சாதாரண மக்களால் மட்டும் அல்ல, அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என பலராலும் இந்த செய்தி பகிரப்பட்டு வந்தது.

"உத்தரப்பிரதேச மாநிலம் பதோய் மாவட்டத்தில் தினக்கூலியாக இருக்கும் பெண் ஒருவர் முடக்கம் காரணமாக சாப்பாடு சரிவரக் கொடுக்க முடியாததால் தன்னுடைய ஐந்து குழந்தைகளை ஆற்றில் வீசினார்" என ஐஏஎன்எஸ் செய்தி முகமை கூறியுள்ளதாக அவுட்லுக்கில் வெளியான செய்திதான் அது.

இந்த செய்தியையே பல அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் டிவிட்டரில் பகிர்ந்திருந்தனர். ஆனால் தற்போது ராணா ஆயுப் என்ற பிரபல பத்திரிகையாளர் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரவக்தா ஐபி சிங் ஆகியோர் தங்கள் டிவிட்டர் பதிவை நீக்கிவிட்டனர்.

இந்த செய்தியின் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுபோன்று ஒரு சம்பவம் நடந்ததாக யாரும் இதுவரை கூறவில்லை.

அந்த செய்தியில் தகவல்கள் முழுவதுமாக இல்லை. அப்படியிருந்தும் சமூக வலைதளத்தில் பலர் இதை பகிர்கின்றனர்.

பிரஷாந்த் பூஷன்

பல சமூக செயற்பாட்டாளர்களும் இந்த செய்தியை பகிர்ந்துள்ளனர் மற்றும் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ் லெனின்ஸ்ட்) கட்சியை சேர்ந்த கவிதா கிருஷ்ணன் இது குறித்து பேசி காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து முழு தகவல் தெரிய பதோயி காவல் கண்காணிப்பாளரிடம் பேசினோம்.

"சனிக்கிழமையன்று இரவு ஒன்றரை இரண்டு மணி போல இந்த சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுகிழமை காலை 9 மணிக்கு எங்களுக்கு தகவல் வந்து சென்றபோது குற்றம்சாட்டப்பட்ட மஞ்சுதேவி ஆற்றில் தனது ஐந்து குழந்தைகளை வீசியுள்ளார். ஆனால் அதற்கு காரணம் அவருடைய கணவர். அவருடைய கணவர் போதைக்கு அடிமையானவர். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மஞ்சுதேவி தன் ஐந்து குழந்தைகளை நதியில் வீசிவிட்டு தானும் குதித்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரிந்ததால் அவர் மட்டும் தப்பிவிட்டர்" என அவர் கூறியுள்ளார்.

இப்போது போலீஸார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். அதோடு அவருடைய வீட்டில் உணவு இருப்பதையும் புகைபடம் எடுத்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

அந்த பெண் காவல்துறை கட்டுபாட்டில் இருப்பதால் அவரிடம் பேச முடிய வில்லை.

Banner image reading 'more about coronavirus'
Banner

அந்த பெண்ணின் கணவரின் தம்பி இதுகுறித்து கூறுகையில், "வீட்டில் சாப்பாடுக்கெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை. அவரின் கணவர் ஒரு கடையில் வேலை செய்கிறார். பெரிய அண்ணன் அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். இதனால் வீட்டில் சாப்பாடுக்கெல்லாம் எந்த பிரச்சனையும் வராது. 4 குழந்தைகளின் சடலம் கிடைத்துள்ளது. ஒரு குழந்தையின் சடலம் இப்போதுவரை கிடைக்கவில்லை" என்கிறார்.

சமூக ஆர்வலர் பிரஷாந்த் பூஷன், "அந்த பெண் உணவில்லாமல் குழந்தைகளை ஆற்றில் வீசவில்லை என பதாய் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்," என பிரஷாந்த் தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

சமூக ஆரவலர் கவிதா கிருஷ்ணனும் இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார்.

கொரோன வைரஸ்

பாதிக்கப்பட்ட குடும்பம் மற்றும் போலீஸாருடன் பேசியதில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அது முடக்கத்தின் காரணமாக இல்லை என தெரிய வந்துள்ளது. ஆனால் இது தெரியாமல் பலர் இதை பகிர்ந்து வந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: