கொரோனா வைரஸ்: நெருக்கடியில் உலகம், பெட்ரோல் உற்பத்தி குறைப்பு மற்றும் பிற செய்திகள்

நெருக்கடியில் உலகம், பெட்ரோல் உற்பத்தி குறைப்பு

பட மூலாதாரம், TASS / GETTY IMAGES

எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பில் (ஒபெக்) உள்ள நாடுகளும் மற்றும் அதன் நட்பு நாடுகளும் எண்ணெய் உற்பத்தியை பத்து சதவீதம் அளவுக்கு குறைக்க ஒப்புக் கொண்டுள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் நுகர்வு குறைந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக நடந்த கூட்டத்தில் இந்த முடிவிற்கு வர எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

ஒபெக் இப்படியான முடிவிற்கு ஒப்புக் கொள்வது இதுவே முதல்முறை. ரஷ்யாவுடன் கூட்டணியில் இருக்கும் பிற எண்ணெய் உற்பத்தி நாடுகள் (ஒபெக் +) இந்த ஒப்பந்தத்திற்கான திட்டத்தை ஏப்ரல் 9 முன் வைத்தது.

ஆனால், மெக்சிகோ அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இப்படியான சூழலில் இந்த முடிவு இப்போது எட்டப்பட்டிருக்கிறது. 9.7 மில்லியன் பேரல்கள் அளவுக்கு எண்ணெய் உற்பத்தி இதன் காரணமாக குறையும்.

இன்னும் இது ஒபெக்கால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், ட்ரம்ப் மற்றும் குவைத் அமைச்சர் இது தொடர்பாக ட்வீட் பகிர்ந்துள்ளனர். செளதி மற்றும் ரஷ்யா இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

Presentational grey line

கொரோனா வைரஸ்: இலங்கை - உடல்களை தகனம் செய்ய இஸ்லாமியர்கள் எதிர்ப்பு, அறிவிப்பை வெளியிட்ட அரசு

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் உயிரிழக்கும் கொரோனா தொற்றாளர்களின் சடலங்களை தகனம் செய்யும் வகையில் அரசாங்கத்தினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் (11) வெளியிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கான அதிகாரங்களின் பிரகாரமே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Presentational grey line

கொரோனா வைரஸ்: "அதீத அதிகாரத்தை கைப்பற்ற கோவிட் 19ஐ அரசுகள் பயன்படுத்தும்" - எச்சரிக்கும் வல்லுநர்கள்

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் இப்போது ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தைவிட இவை எல்லாம் சரியான பின் அது ஏற்படுத்த போகும் தாக்கம்தான் மிக மோசமாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

அமெரிக்க தத்துவயியல் நிபுணரும், மொழியியல் நிபுணருமான நோம் சாம்ஸ்கி, "தொற்றுநோய்க்கு பிந்தைய சாத்தியக்கூறுகள் தீவிர சர்வாதிகாரம் உடைய மிருகத்தனமான அமைப்புகளை நிறுவுவதிலிருந்து … லாபமற்று மனிதாபிமானத்துடன் இயங்கிய அமைப்புகளை முழுவதுமாக சிதைப்பது வரை இருக்கும்," என்று எச்சரிக்கிறார்.

கொரோனா வைரஸ்

"இந்த அதிக சர்வாதிகாரம் நிறைந்த, மோசமான அமைப்புகள் புதிய தாராளமயத்துடன் மிகவும் ஒத்துப்போகும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்." என்று நோம் சாம்ஸ்கி ஒரு உரையாடலில் தெரிவிக்கிறார்.

Presentational grey line

'கொரோனா ஊரடங்கு தொடர்பாக தமிழக முதல்வரால் ஏன் முடிவெடுக்க முடியவில்லை?'

தமிழக முதல்வர்

பட மூலாதாரம், ARUN SANKAR / GETTY

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, ஒடிஷா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக தலைமை செயலர் சண்முகம் பிரதமர் மோதி வெளியிடவுள்ள அறிவிப்பை பொறுத்து தமிழக அரசு முடிவெடுக்கும் என்று கூறினார்.

தன்னிச்சையாக எந்த முடிவையும் முதல்வரால் எடுக்க முடியவில்லையா என கேள்வி எழுப்பி பலரும் அவரை ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்கள்.

Presentational grey line

உலக சுற்றுலா தினம் - இந்தியாவில் கட்டாயம் பயணிக்க வேண்டிய 15 இடங்கள்

இந்தியாவில் கட்டாயம் பயணிக்க வேண்டிய 15 இடங்கள்

பட மூலாதாரம், TIM GRAHAM

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்திற்கு முன்பு, இந்தியர்கள் நாட்டின் 15 சுற்றுலா தளங்களுக்கு பயணிக்க முயல வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி சுதந்திர தின விழாவில் பேசினார்.

செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து பேசிய அவர், "இந்தியர்கள் சுற்றுலாவிற்காக வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால், 2022ஆம் ஆண்டு, இந்தியா தனது 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும். அதற்குள் இந்தியர்கள் நாட்டிலுள்ள 15 சுற்றுலா தளங்களுக்கு சென்றுவர யோசிக்க வேண்டும்," என்று அவர் பேசினார்.

அவரின் கருத்தின்படி, நாட்டிலுள்ள சுமார் 10 கோடி மக்கள் இந்த குறைந்தபட்ச 15 இடங்களுக்கான பயணத்தை மேற்கொண்டாலும், அது 150 கோடி பயணங்களாகும்!

பல்வேறு மொழி, கலாசாரம், உணவு என வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாடும் இந்தியாவில், மக்கள் பயணிக்க சிறந்த இடங்கள் பல இருந்தாலும், அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 இடங்களை தொகுத்து வழங்குகிறது பிபிசி.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: