You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: ”இந்தியாவில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன”
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 796 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும், கொரோனா தொற்றால் 35 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸை விரைவாக உறுதிப்படுத்தும் 'ராபிட் கிட்' மருத்துவ கருவிகளின் முதல் தொகுப்பு வரும் 15ஆம் தேதி சீனாவிலிருந்து இந்தியா வர உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த ராமன் கங்ககேத்கர், "இந்தியாவில் நேற்று வரை கோவிட்-19 உறுதிப்படுத்துவதற்காக 2,06,212 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதே எண்ணிக்கையில் நாம் பரிசோதனையை மேற்கொண்டால், அடுத்த ஆறு வாரங்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனை கருவிகளின் இருப்பு உள்ளது" என்று கூறினார்.
சரி… இந்திய அளவில் நடந்த சில முக்கிய தகவல்களை பார்ப்போம்
ஏப்ரல் 14ஆம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோதி.
சீக்கியர்களின் பைசாகி திருவிழா இன்று (ஏப்ரல் 13) கொண்டாடப்படுவதை அடுத்து, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் சிலர் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு சிலர் சென்று வழிப்பட்டனர். வழக்கமாக ஆயிரக்கணக்கில் திரளும் சீக்கியர்கள் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சிலர் மட்டுமே கோயில் சென்றனர். பஞ்சாப் முதல்வரும் அனைவரும் வீட்டிலிருந்தப்படியே வழிபடும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆக்ராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி பகுதியில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளது, 5 பேர் பலியாகி உள்ளனர்.
மும்பை பங்கு சந்தை 426.05 புள்ளிகள் சரிந்து 30,733.57 ஆக இருந்தது.
மத்திய பிரதேசத்தில் ட்ரோன்கள் வைத்து மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.
அசாமில் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மக்கள் நீண்ட வரிசையில் மது வாங்கினர்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: “உங்கள் ஊரில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா?” - இந்தக் கட்டுரையைப் படியுங்கள்
- கொரோனா வைரஸ்: ஊரடங்கு காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சந்தித்து வரும் சவால்கள் என்ன?
- கொரோனா வைரஸ்: நெருக்கடியில் உலகம், பெட்ரோல் உற்பத்தி குறைப்பு
- கொரோனா வைரஸ்: உடல்களை தகனம் செய்ய இஸ்லாமியர்கள் எதிர்ப்பு, அறிவிப்பை வெளியிட்ட அரசு