பாகிஸ்தான் - 'அத்துமீறிய இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்'

சில முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி - 'இந்திய உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது'

எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்து வந்த இந்திய உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி.

சிறியரக இந்திய உளவு விமானம் ஒன்று, சங்க் பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி வந்தது. உளவு பார்ப்பதற்காக, பாகிஸ்தான் பகுதிக்குள் 600 மீட்டர் தூரம்வரை அத்துமீறி நுழைந்தது. இந்திய விமானத்தின் அந்த ஆத்திரமூட்டும் செயலுக்கு பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது என்று பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் இதுபோன்ற தேவையற்ற செயல்கள், ஏற்கனவே வகுக்கப்பட்ட விதிமுறைகளையும், இருநாட்டு வான்வழி ஒப்பந்தத்தையும் மீறிய செயலாகும். மேலும், 2003-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்திய ராணுவம் அவமரியாதை செய்வதை இந்த ஊடுருவல் உணர்த்துகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்து தமிழ் திசை - வீடு திரும்பிய தாய், மகன்கள்

மதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவரின் மனைவி, 2 மகன்கள் இந்த நோயில் இருந்து குணமடைந்து வீட்டுக்குச் சென்றனர் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி .

தமிழகத்தில் கொரோனாவுக்கு முதலில் மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரைப் பரிசோதனை செய்தபோது அவரது மனைவி, 2 மகன்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த மூன்று பேரும் குணமடைந்து நேற்று முன்தினம் வீட்டுக்குத் திரும்பினர்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - ஐ.பி.எல் போட்டிகளுக்கு இழப்பீடு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடக்காது என்பதால் சுமார் 14.1 கோடி அமெரிக்க டாலர் காப்பீட்டுத் தொகை பெறவுள்ள நிலையில், ஐ.பி.எல் அணிகளுக்கு அவ்வாறு இழப்பை ஈடுகட்டும் காப்பீட்டுத் தொகை கிடைக்க முடியாத சூழல் உள்ளது.

சார்ஸ் நோய்த் தொற்று உடனான பின், பெருந்தொற்று உண்டாகி டென்னிஸ் போட்டிகள் றது செய்யப்பட்டால் அதற்கு இழப்பீடு பெரும் நோக்கில் ஆண்டுதோறும் 2 மில்லியன் டாலர் பணத்தை விம்பிள்டன் ஏற்பாட்டாளர்கள் காப்பீட்டு சந்தாவாக செலுத்தி வருகின்றனர்.

இதே போன்றதொரு காப்பீட்டை பெற ஐ.பி.எல் அணிகள் பிப்ரவரி மாதம் முயன்றன. ஆனால், கொரோனா அப்போதே உலகம் முழுவதும் பரவத் தொடங்கியிருந்தது.

எதிர்பாராத விதமாக போட்டிகள் நடக்காமல் போனால் அதற்காக ஐ.பி.எல் அணிகள் காப்பீடு செய்வது வழக்கம். ஆனால், கோவிட்-19 தொற்றால் ஆட்டம் நடக்காமல் போனதற்கு இழப்பீடு பெற முடியாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: