"அகல் விளக்கு - கொரோனா வைரஸ்" - இணையத்தில் ட்ரெண்டான அட்டகாச மீம்ஸ்களின் தொகுப்பு

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அனைவரும் ஒன்றிணைந்திருப்பதை சுட்டிக்காட்டும் வகையில், இன்று (ஏப்ரல் 5) இரவு 9 மணிக்கு துவங்கி 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்கை ஏற்றும்படி இந்தியப் பிரதமர் மோதி கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை அடுத்து நாடு முழுவதும் பலர் அதனை செயல்படுத்தினர். வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்த மக்கள், பிறகு அகல் விளக்குகளையும், டார்ச் விளக்குகளையும் ஒளிர செய்தனர்.

அகல் விளக்குகளை ஏற்றும் போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு மோதி கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், அகல் விளக்குகளுடன் மக்கள் ஊர்வலமாக சென்றது விமர்சனத்துக்கும் உள்ளானது.

பலர் கொண்டாட்ட மனநிலையில் பட்டாசுகளை வெடித்தனர்.

மெய்நிகர் உலகம்

டிவிட்டரில் இந்திய அளவில் #9minutesforindia, #9baje9mintues, #LightForIndia ஆகிய ஹாஷ்டேகுகள் ட்ரெண்டாகின.

இந்த ஹாஷ்டேகுகளின் கீழ் பிரதமரைப் புகழ்ந்து அகல்விளக்குகளுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்தனர்.

அதே நேரம் கிண்டல் மீம்ஸுகளுக்கும் இணையத்தில் குறைவில்லை.

அப்படியான சில மீம்ஸுகளை இங்கே தொகுத்துள்ளோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: