மோதி - டிரம்ப்: மன நலம், எண்ணெய், மருந்துப் பொருள் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

பட மூலாதாரம், Sergio Flores/getty Images
இன்று செவ்வாய்க்கிழமை டெல்லியில் டிரம்பும் மோதியும் சந்தித்ததில் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கிடையே சுகாதாரம் மற்றும் எண்ணெய் வளத்துறையில் மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
- இரு நாடுகளின் சுகாதாரத்துறைகளுக்கு இடையே மனநலம் குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
- அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கும் இந்திய மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கும் இடையே மருத்துவ பொருள் பாதுகாப்பு குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
- இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், எக்சான் மொபில் இந்தியா நிறுவனம் மற்றும் அமெரிக்க சார்ட் தொழிற்சாலைகள் இடையே ஒத்துழைப்புக் கடிதம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இன்று செய்தியாளார்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்பும் பிரதமர் மோதியும் இரு நாடுகளுக்கிடையேயான உறவு மேம்பட்டிருப்பதாக அறிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:









