“டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்”: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சர்ச்சை மிகுந்த திட்டமாக அறியப்பட்ட ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்தப்படமாட்டாது என்றும் டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கால்நடைப்பூங்காவின் திறப்புவிழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதி தராது என்று உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்புக்கு விவசாய சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டுவந்தது திமுக என்றும் அந்த நிறைவேற்ற முயற்சி எடுத்ததும் திமுகதான் என குறிப்பிட்ட முதல்வர், திமுக எம்.பி.டி ஆர் பாலு ஊடகங்களில் அளித்துள்ள பேட்டியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கொண்டுவந்தது திமுக என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என தெரிவித்தார்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சியைக் குறைசொல்வதை மட்டுமே வழக்கமாகக் கொண்டுள்ளார் என்றும் அதிமுகவுக்கு எதிராக செய்யும் பிரச்சாரங்கள் எதுவும் மக்களிடம் எடுபடாது என்றார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
முதல்வரின் அறிவிப்பில், வேளாண் மண்டலத்திற்குத் தனிச்சட்டம் கொண்டுவரப்படும் என்றும் கூறியுள்ளது அவரது அறிவிப்புக்கு வலுசேர்த்துள்ளது என விவசாய சங்கங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பு ஆறுதலை தருகிறது என்கிறார் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன். ''எங்களைப்போன்ற விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு ஆறுதல். பல நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் கிடைத்த வெற்றி. இந்த அறிவிப்பால் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என நம்புகிறோம்,'' என்றார் பி.ஆர்.பாண்டியன்.
''ஹைட்ரோகார்பன் திட்டம் கொண்டுவந்தால் விவசாயம் அழிந்துபோகும் ஆபத்து உள்ளது. இந்த திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என முதல்வர் அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல விவசாயத்தை
லாபகரமாக தொழிலாக மாற்றவேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பதை சட்டமாக மாற்றவேண்டும்,''என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு பாதுகாப்பு சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- ''குடிகாரர்கள் மதுக்கடை தேடுவது போல அரசுப் பணிக்கு இடைத் தரகர்களை தேடுகிறார்கள்''
- ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் - இருவர் உயிரிழப்பு
- "பாலத்தீனம் மீதான ஒடுக்குமுறை நீடித்தால் மலேசியா அமைதி காக்காது": மகாதீர் சீற்றம்
- "பாலத்தீனம் மீதான ஒடுக்குமுறை நீடித்தால் மலேசியா அமைதி காக்காது": மகாதீர் சீற்றம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













