You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெங்காயம் அறுவடை செய்து குறைந்த விலைக்கு விற்ற சிறைக்கைதிகள்
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
சாம்பார் வெங்காயங்களை சந்தை விலையைக் காட்டிலும் 20 சதவீதம் வரை குறைவாக விற்று திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகள், தொழில் செய்து அனைவருக்கும் உதவ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.
புதனன்று சுமார் 50 டன் சாம்பார் வெங்காயங்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.
மேலும் அறுவடை செய்யும் இடங்களை அதிகரிக்கவும், மேலும் பல சிறைக்கைதிகளை பாதியளவு திறந்தவெளிகளுக்கு கொண்டு வரவும் சிறைத்துறை முடிவு செய்துள்ளது.
2019ஆம் ஆண்டு சுமார் அரை ஏக்கர் நிலத்தில் சாம்பார் வெங்காயம் பயிரிடப்பட்டது.
இந்த பணியில் ஈடுபட்டு வரும் 25 கைதிகள் 80 சதவீதம் இயற்கையான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தியுள்ளனர் என்று மேலும் விவரிக்கிறது அச்செய்தி.
தினமணி - விண்வெளிக்கு பெண் ரோபோ
ககன்யான் திட்டத்தின் முன்னோட்டமாக விண்ணுக்குச் செலுத்தப்படும் ஆளில்லா விண்கலத்தில் `வியோமா மித்ரா`(விண் தோழன்) எனப்படும் பெண் ரோபோ அனுப்பி வைக்கப்படும் என்கிறது தினமணியின் செய்தி.
இந்த ரோபோ விண்வெளியில் மனிதச் செயல்பாடுகளை நிகழ்த்திக் காட்டும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற மனித விண் பயணம் முற்றாய்வின் தற்கால சவால்கள் மற்றும் எதிர்காலப் போக்குகள் என்ற கருத்தரங்கத்தை தொடக்கி வைத்து பேசிய அவர், விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
மனிதனை முதல்முறையாக விண்ணுக்கு அனுப்புவது தவிர, விண்வெளியில் தொடர்ந்து மனிதச் செயல்பாடுகளை அதிகரிக்கும் வகையில், புதிய விண்வெளி ஆய்வு மையத்தை அமைப்பதற்கான முயற்சியாகவும் இத்திட்டத்தை செயல்படுத்த இந்தியா முனைந்துள்ளது என சிவன் தெரிவித்தார் என்கிறது அச்செய்தி.
தி இந்து - `மெரினாவில் 900 தள்ளுவண்டிகள் மட்டுமே`
சென்னை மெரினா கடற்கரையில் 1352 தள்ளுவண்டிகளை 22.27 கோடி ரூபாய்க்கு வாங்கி விற்பனையாளர்களுக்கு இலவசமாக விநியோகிக்க சென்னை மாநகராட்சியின் முடிவை எச்சரித்துள்ளது உயர்நீதிமன்றம் என்கிறது தி இந்து நாளிதழ்.
சென்னை மெரினா கடற்கரையில் 900 விற்பனையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என முன்னதாக மாநகராட்சி தெரிவித்திருந்தது. எனவே 1352 தள்ளுவண்டிகள் வாங்குவது குறித்து எச்சரித்த நீதிபதிகள், 900 என்பதே மெரினா கடற்கரையை பொறுத்தவரை அதிகம், 900க்கு மேல் தள்ளுவண்டியை வாங்க கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மெரினா கடற்கரை என்பது பொதுமக்களுக்கானது. வியாபாரம் செய்து நன்மை பெற நினைப்பவர்களுக்கு அல்ல என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கிறது அச்செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: