You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜே.என்.யு வன்முறை: சந்தேக நபர் பட்டியலில் மாணவர் சங்க தலைவர் ஒய்ஷி கோஷ்
ஜே.என்.யு பலகலைக்கழகத்தில் கடந்த ஜனவரி 5ஆம் தேதியன்று நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்டதாக சிசிடியில் பதிவான சந்தேக நபர்களின் புகைப்படங்களை டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த டெல்லி போலீஸின் செய்தி தொடர்பாளர், எம்.எஸ்.ராந்தாவா, ஜே.என்.யு வன்மூறை தொடர்பாக பதியப்பட்ட குற்றவியல் வழக்குகளை குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் ஜே.என்.யு வழக்குகள் தொடர்பாக பல தவறாக தகவல்கள் பரவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்பின் பேசிய டெல்லி போலீஸின் குற்றவியல் பிரிவு டிசிபி ஜாய் டிகி, வன்முறை தொடர்பாக மூன்று வழக்குகள் தொடர்ப்பட்டுள்ளன என்றும், சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
சந்தேக நபர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் பெயரில் ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தலைவர் ஒய்ஷி கோஷின் பெயரையும் வெளியிட்டுள்ளது காவல்துறை.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஒய்ஷி கோஷ், ''போலீஸார் தங்களின் விசாரணையை தொடங்கட்டும், நான் தாக்கப்பட்டது குறித்து என்னிடமும் ஆதாரம் உள்ளது'' என்று தெரிவித்தார்.
மனிதவள மேம்பாட்டுதுறையுடன் சந்திப்பு
இன்று மனிதவள மேம்பாட்டுதுறை செயலாளர் அமித் கரே ஜே.என்.யு நிர்வாகம் மற்றும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
மனிதவள மேம்பாட்டு துறை மாணவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறும் கோரியது.
ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன?
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது தாக்குததல் நடத்தினர்.
அந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஒய்ஷி கோஷ் உட்பட 34 பேர் காயமடைந்தனர். பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலை கண்டித்து நாட்டின் பல இடங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
ஜே.என்.யு சம்பவம் தொடர்பாக ஒய்ஷி கோஷ் மற்றும் பிற மாணவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இருப்பினும் இது ஞாயிறன்று நடைபெற்ற வன்முறை தொடர்பாக இல்லை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்