இரான் வெளியுறவு அமைச்சர் ஜாவேத் ஜாரிஃப் - இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உரையாடல்: "தொடர்பில் இருப்போம்"

இரான்- அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தாம் சற்று முன் இரான் வெளியுறவு அமைச்சருடன் பேசியதாகவும், தொடர்பில் இருப்பதென்று இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இரானின் சக்திமிக்க புரட்சிகர காவல் படையின் தளபதி ஜெனரல் காசெம் சுலேமானீ இராக்கின் பாக்தாத் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சென்று கொண்டிருந்தபோது அமெரிக்காவால் கொல்லப்பட்டார்.

இது இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றத்தை மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை மாலை ட்விட்டரில் ஒரு பதிவு இட்டுள்ளார்.

அதில் இரான் வெளியுறவு அமைச்சர் ஜாவேத் ஜாரிஃப்புடன் சற்று முன்னர் பேசியதாக அவர் கூறியுள்ளார். "தற்போதைய நிலைமைகள் மிக மோசமாக மாறியிருப்பதைப் புரிந்துகொண்டேன். இந்த பதற்றத்தின் அளவு குறித்து இந்தியா கவலையுடன் இருக்கிறது. நாங்கள் தொடர்பில் இருப்பது என்று ஒப்புக்கொண்டோம்" என்றும் அவர் அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: