ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

2007-ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2017ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்குப் பதிவு செய்தது.

ப.சிதம்பரத்தின் மீதான ஊழல் புகார் தொடர்பாக அவரை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில்தான் தற்போது சிதம்பரம் மீதும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இரு தினங்களுக்கு முன்னதாக இதே வழக்கில் பண மோசடி குற்றச்சாட்டில் இவரை விசாரிக்க காவலில் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை காவலில் எடுத்தது. அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து அவரை திகார் சிறையில் இருந்து அவரை நேற்று (வியாழக்கிழமை) அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :