அயோத்தி வழக்கு விசாரணை: 18ஆம் தேதிக்குள் முடிக்க திட்டம் - உச்ச நீதிமன்றம்

அயோத்தி நில உரிமை வழக்கின் விசாரணையை அக்டோபர் 18ஆம் தேதியுடன் முடிக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், "அயோத்தி நில உரிமை வழக்கை முடிப்பதற்கான உத்தேச தேதிகளைக் கணக்கிடப்பட்டிருப்பதை வைத்துப் பார்க்கும் போது, இவ்வழக்கில் அனைத்து தரப்பும் வாதங்களும் அக்டோபர் 18-க்குள் முடிக்க வேண்டி இருக்கும்," என்று கூறி உள்ளார்.

மேலும், வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே சம்மந்தப்பட்ட தரப்புகள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ள விரும்பினால் அவர்கள் அவ்வாறே செய்யலாம் என்றும் ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கூறி உள்ளது.

அயோத்தி தொடர்புடைய செய்திகளைப் படிக்க:

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் குறித்து அறிய:

சந்திரயான் 2: விக்ரம் லேண்டரின் நிலை என்ன இஸ்ரோ சூசக செய்தி என்ன?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :